/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஓட்டு எண்ணிக்கையில் பதட்டமும்... பரபரப்பும் கூடாது! ஓட்டு எண்ணிக்கைக்கான தேர்தல் பார்வையாளர் அறிவுறுத்தல் ஓட்டு எண்ணிக்கையில் பதட்டமும்... பரபரப்பும் கூடாது! ஓட்டு எண்ணிக்கைக்கான தேர்தல் பார்வையாளர் அறிவுறுத்தல்
ஓட்டு எண்ணிக்கையில் பதட்டமும்... பரபரப்பும் கூடாது! ஓட்டு எண்ணிக்கைக்கான தேர்தல் பார்வையாளர் அறிவுறுத்தல்

ADDED : ஜூன் 04, 2024 01:30 AM

கோவை;லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கைப்பணிகளை, துரிதமாகவும் மிகச்சரியாகவும் மேற்கொள்வது தொடர்பான இறுதி கட்ட பயிற்சி, ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் நேற்று நடந்தது.
பயிற்சியில், ஓட்டு எண்ணிக்கைக்கான தேர்தல் பார்வையாளர் கிருஷ்ணகுணால் பேசியதாவது:
கன்ட்ரோல் யூனிட் இயந்திரத்தில் இருக்கும் பதிவு எண்ணும், அதனுடன் இருக்கும் சீலிடப்பட்ட ஆவணத்திலுள்ள பதிவு எண்ணும், சரியாக இருக்கிறதா என்பதை சரிபார்த்து உரக்க படிக்க வேண்டும். சரியாக இருக்கும் பட்சத்தில், 'சீலை' அப்புறப்படுத்த வேண்டும்.
அதன் பின் இயந்திரத்தில் இருக்கும் சுவிட்ச்சை, ஆன் செய்ய வேண்டும். அதன் பின் சேகரமாகும் ரீடிங் எண்ணிக்கையை, வரிசையாக சொல்வதோடு அதற்கான படிவத்தில் மிகச்சரியாக எழுத வேண்டும். பதட்டமோ, பரபரப்போ கூடாது.
எண்ணிக்கை எழுதுவதில் பிழை இருக்கக்கூடாது. ஐந்து, மூன்று இரண்டு ஆகிய எண்களை மிகச்சரியாக எழுத வேண்டும். ஒவ்வொரு சுற்றுக்கும், மைக்ரோ அப்சர்வர்கள் டேபிளுக்கு டேபிள் 'கிராஸ் செக்' செய்வோம்; பதட்டப்படக்கூடாது.
சர்க்கரை நோய் இருப்பவர்கள், ரத்தஅழுத்தம் இருப்பவர்கள் அவர்களுக்கான மருந்துகளை சரியாக உட்கொள்ள வேண்டும். பிஸ்கட், சாக்லெட் ஆகியவை வைத்துக்கொள்வது நல்லது. தண்ணீர், உணவு ஆகியவை அங்கேயே வழங்கப்படும்.
தேர்தல் முடிவுகளை மிகச்சரியாகவும், துரிதமாகவும் வெளியிட பணியாளர்கள் வேகமாகவும், விவேகமாகவும் செயல்பட வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன், மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, மாநகராட்சி துணை கமிஷனர் செல்வசுரபி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பொறுப்பு விஷ்ணுவர்தினி ஆகியோர் இருந்தனர்.
அனைவருக்கும் ஓட்டு எண்ணிக்கைப்பணிக்கு, செல்வதற்கான அடையாள அட்டை மற்றும் தேர்தல் கமிஷன் வரையறுத்து பட்டியலிட்டுள்ள விதிமுறைகள் வழங்கப்பட்டன.
சர்க்கரை நோய் இருப்பவர்கள், ரத்தஅழுத்தம் இருப்பவர்கள் அவர்களுக்கான மருந்துகளை சரியாக உட்கொள்ள வேண்டும். பிஸ்கட், சாக்லெட் ஆகியவை வைத்துக்கொள்வது நல்லது. தண்ணீர், உணவு ஆகியவை அங்கேயே வழங்கப்படும்.