/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஆயிரம் பேர் குடியிருந்தும் அரசு பஸ் வசதி இல்லை ஜமாபந்தியில் புகார் மனு ஆயிரம் பேர் குடியிருந்தும் அரசு பஸ் வசதி இல்லை ஜமாபந்தியில் புகார் மனு
ஆயிரம் பேர் குடியிருந்தும் அரசு பஸ் வசதி இல்லை ஜமாபந்தியில் புகார் மனு
ஆயிரம் பேர் குடியிருந்தும் அரசு பஸ் வசதி இல்லை ஜமாபந்தியில் புகார் மனு
ஆயிரம் பேர் குடியிருந்தும் அரசு பஸ் வசதி இல்லை ஜமாபந்தியில் புகார் மனு
ADDED : ஜூன் 25, 2024 02:12 AM
அன்னுார்;'ஆயிரம் பேர் குடியிருந்தும், அரசு பஸ் வசதி இல்லை,' என தாசபாளையம் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தாசபாளையம் ஊர் பொதுமக்கள் சார்பில், அன்னுார் தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமா பந்தியில் அளித்த மனுவில்,'எங்கள் ஊரில், 350 குடும்பங்களில் ஆயிரம் பேர் வசித்து வருகிறோம்.
இங்கிருந்து நடுநிலைப்பள்ளிக்கு கஞ்சப்பள்ளி செல்ல வேண்டும். மேல்நிலைப்பள்ளிக்கு அன்னுார் செல்ல வேண்டும். அரசு மருத்துவமனை, வேளாண் துறை அலுவலகம் என அனைத்துக்கும் அன்னுார் தான் செல்ல வேண்டும்.
ஆயிரம் பேர் குடியிருக்கும் அனைத்து கிராமங்களுக்கும் பஸ் வசதி செய்யப்படும் என அரசு தெரிவித்துள்ளது. ஆனால் எங்கள் ஊரில் ஆயிரம் பேர் குடியிருந்தும் அரசு பஸ் வசதி இல்லை. அரசு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாசபாளையம் புதுக்காலனி மக்கள் அளித்த மனுவில்,' எங்கள் காலனியில் 160 குடும்பங்கள் வசிக்கின்றன. ஆனால் பல வீதிகள் மண் பாதையாக உள்ளன. மழை பெய்தால் சேறும் சகதியுமாக மாறி விடுகிறது. காங்கிரீட் சாலை அமைக்க வேண்டும்.
காலனியில் இருந்து மயானத்திற்கு செல்லும் பாதையில் மின் விளக்கு இல்லை. இறப்பு ஏற்பட்டால் இரவு நேரத்தில் இருட்டில் சென்று இறுதிச்சடங்கு செய்ய வேண்டி உள்ளது. மயானம் செல்லும் பாதையில் தெரு விளக்குகள் அமைக்க வேண்டும்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என வருவாய் துறை அதிகாரிகள் உறுதி அளித்தனர்.