/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பழைய ஆயக்கட்டு கால்வாய் சீரமைக்கும் பணிகள் தீவிரம் பழைய ஆயக்கட்டு கால்வாய் சீரமைக்கும் பணிகள் தீவிரம்
பழைய ஆயக்கட்டு கால்வாய் சீரமைக்கும் பணிகள் தீவிரம்
பழைய ஆயக்கட்டு கால்வாய் சீரமைக்கும் பணிகள் தீவிரம்
பழைய ஆயக்கட்டு கால்வாய் சீரமைக்கும் பணிகள் தீவிரம்
ADDED : ஜூன் 03, 2024 11:58 PM

ஆனைமலை;ஆழியாறுபழைய ஆயக்கட்டு கால்வாய்கள் சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஆனைமலை அருகே, ஆழியாறு அணையில் இருந்து பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு நீர் வினியோகிக்கப்படுகிறது. அதில், பழைய ஆயக்கட்டில், பள்ளிவிளங்கால், அரியாபுரம், காரப்பட்டி. பெரியணை, வடக்கலுார் ஆகிய ஐந்து கால்வாய்கள் வாயிலாக, 6,400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்நிலையில், தடுப்பணைகள், கால்வாய்களை சீரமைக்க தமிழக அரசு, 11 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ததையடுத்து, பணிகள் நடைபெற்று வருகின்றன. அரியாபுரம் கால்வாய் பணிகளை, உதவி பொறியாளர் அக்பர்அலி, பாசன சங்கத் தலைவர் வஞ்சிமுத்து மற்றும் விவசாயிகள் பார்வையிட்டனர்.
நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'அரியாபுரம் தடுப்பணை கால்வாய் பணிகள், 90 சதவீதமும், பெரியணை கால்வாய் பணிகள், 80 சதவீதமும் முடிந்துள்ளன. மற்ற கால்வாய்கள், 60 - 70 சதவீதம் வரை நிறைவு பெற்றுள்ளன.
பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறப்புக்கு முன் கால்வாய் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது,' என்றனர்.