Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம்: கூட்டுறவு வங்கி பணியாளர்கள் போராட்டம்

18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம்: கூட்டுறவு வங்கி பணியாளர்கள் போராட்டம்

18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம்: கூட்டுறவு வங்கி பணியாளர்கள் போராட்டம்

18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம்: கூட்டுறவு வங்கி பணியாளர்கள் போராட்டம்

ADDED : ஜூன் 03, 2024 11:57 PM


Google News
Latest Tamil News
- நிருபர் குழு -

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர், ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில், தொடக்க, நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக, 23,503 முழு நேர ரேஷன் கடைகளும், 9,565 பகுதி நேர ரேஷன் கடைகளும் இயங்குகின்றன.இந்த கடைகளில் பணியாற்றும் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர், கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சி பகுதியில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஒன்றிய செயலாளர்கள் நாட்டுத்துரை, திருமூர்த்தி, செல்வகுமார் மற்றும் நிர்வாகிகள் ஆழியாறு பகுதியில் ஒன்றாக கூடி அடுத்த கட்ட முடிவுகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

சங்க நிர்வாகிகள் கூறியதாவது:

ரேஷன் கடைகளில் வினியோகிக்கப்படும் அத்தியாவசிய பொருட்கள், மூட்டை ஒன்றுக்கு ஒரு கிலோ முதல், ஐந்து கிலோ வரை எடை குறைவாக வழங்கப்படுகிறது. இந்த எடை குறை மோசடியை தடுக்க, ஒரு அதிகாரி உடன் இருந்து எடை அளவை சரிபார்க்க வேண்டும்.

ஒவ்வொரு கடைக்கும் வெளிச்சந்தை விலையை விட கூடுதல் விலைக்கு தரமற்ற கட்டுப்பாடற்ற பொருட்கள், 25ஆயிரம் ரூபாய்க்கு குறையாமல் விற்பனை செய்ய கூட்டுறவுத்துறையால் நிர்பந்திக்கப்படுகிறது.இது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

இவை உள்ளிட்ட, 18 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என, ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்பட்டது. அதில், பொள்ளாச்சி தெற்கு, வடக்கு, ஆனைமலை ஒன்றியங்களில் உள்ள, 220 பேர் இப்போராட்டத்தில் ஈடுபட்டோம்.

தொடர்ந்து கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், வரும் ஜூலை, 8ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு, கூறினர்.

உடுமலை


தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ், செயல்படும் ரேஷன்கடைகளில், பயன்பாட்டிலுள்ள பி.ஓ.எஸ்., இயந்திரங்களை, விற்பனையாளர்கள் சொந்த செலவில், பழுது பார்க்கின்றனர். கூட்டுறவு துறையில், பல கட்ட ஆய்வுகள் என்ற பெயரில், அதிகாரிகளுக்கு செலவிட வேண்டியுள்ளது.

இந்த நடைமுறைகளை மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரத்திலுள்ள, 58 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தை சேர்ந்த, 280க்கும் மேற்பட்ட பணியாளர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால், பணிகள் பாதித்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us