/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அசைத்துப்பார்க்குது ஆடிக்காற்று; பட்டுப்போன மரங்கள் அச்சுறுத்துது அசைத்துப்பார்க்குது ஆடிக்காற்று; பட்டுப்போன மரங்கள் அச்சுறுத்துது
அசைத்துப்பார்க்குது ஆடிக்காற்று; பட்டுப்போன மரங்கள் அச்சுறுத்துது
அசைத்துப்பார்க்குது ஆடிக்காற்று; பட்டுப்போன மரங்கள் அச்சுறுத்துது
அசைத்துப்பார்க்குது ஆடிக்காற்று; பட்டுப்போன மரங்கள் அச்சுறுத்துது
ADDED : ஜூலை 24, 2024 11:45 PM

கோவை : ஆடிக் காற்றின் வேகம் தீவிரமடைந்து வரும் நிலையில், கோவை நகரின் பல்வேறு பகுதிகளிலும் அச்சுறுத்தும் வகையிலான காய்ந்த மரங்களை அகற்றாமல் இருப்பது, மக்களை அச்சுறுத்தி வருகிறது.
ஆடி மாதத்தில், வழக்கமாகவே காற்று பலமாக இருக்கும் நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோவையில் கடந்த சில நாட்களாக காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படுகிறது. மரங்கள், செடி, கொடிகளைச் சாய்த்து வருகிறது.
பல இடங்களில் காய்ந்த மரங்கள் அப்புறப்படுத்தப்படாத காரணத்தால், ஆடிக்காற்றின் வேகத்தில் அசைந்தாடி, மக்களை அச்சுறுத்துகின்றன. ரேஸ்கோர்ஸ், ஆர்.எஸ்.புரம் போன்ற பகுதிகளில், பெரிய மரங்களிலிருந்து கிளைகள் உடைந்து விழுகின்றன.
தொண்டாமுத்துார் ரோடு குருசாமி நகரில், முழுவதுமாக பட்டுப்போன மரம் ஒன்று, எந்த நேரத்திலும் விழுவதற்குத் தயார் நிலையில் உள்ளது.
இதே போல நகரின் பல பகுதிகளிலும், காய்ந்த மரங்களும், கிளைகளும் அப்பகுதி மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. இந்த மரங்களால் தேவையற்ற விபரீதம், உயிர்ப்பலி, சேதம் ஏற்படுவதற்கு முன்பு, மாநகராட்சி, வருவாய்த்துறை அதிகாரிகள் இவற்றை அகற்றுவதற்கு, ஏற்பாடு செய்ய வேண்டியது அவசியம்.