/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பூக்கடை வியாபாரிகளிடம் வசூல்; நகராட்சி கூட்டத்தில் புகார் பூக்கடை வியாபாரிகளிடம் வசூல்; நகராட்சி கூட்டத்தில் புகார்
பூக்கடை வியாபாரிகளிடம் வசூல்; நகராட்சி கூட்டத்தில் புகார்
பூக்கடை வியாபாரிகளிடம் வசூல்; நகராட்சி கூட்டத்தில் புகார்
பூக்கடை வியாபாரிகளிடம் வசூல்; நகராட்சி கூட்டத்தில் புகார்
ADDED : ஜூலை 24, 2024 11:45 PM

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் நகர்மன்ற கூட்டம், தலைவர் மெஹரிபா பர்வீன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் வார்டு கவுன்சிலர்கள் பேசியதாவது:
தனசேகர்,(அ.தி.மு.க.): பஸ் ஸ்டாண்டில் உள்ள பூக்கடை வியாபாரிகளிடம், நகராட்சி ரசீது உடன், 150 ரூபாயும், தனிநபர், 150 ரூபாய் என, தினமும், 300 ரூபாய் வசூல் செய்கின்றனர். இந்த தொகையை வசூல் செய்ய நகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளதா? பணம் வசூல் செய்யும் தனிநபர் மீது, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பஸ் ஸ்டாண்டில் உள்ள சிறிய கடை வியாபாரிகளிடம், 50 ரூபாய் வசூல் செய்கின்றனர்.
இதை நகராட்சி நிர்வாகம் ஊக்கப்படுத்தினால், நகரில் உள்ள பலர் பஸ் ஸ்டாண்டில் கடைகள் வைக்க நேரிடும்.
எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டும். பலமுறை கோரிக்கை விடுத்தும் நகராட்சி நடவடிக்கை இல்லை எனக்கூறி, மற்றொரு அ.தி.மு.க., கவுன்சிலர் விஜயலட்சுமியுடன் தரையில் அமர்ந்தார்.
நகராட்சி கமிஷனர் அமுதா: பணம் வசூல் செய்ய, நகராட்சி நிர்வாகம் எவ்வித அனுமதியும் வழங்கவில்லை. இது குறித்து விசாரணை செய்து, சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
நவீன் (தி.மு.க.): எனது வார்டு குடிநீர் குழாயில் கழிவுநீர் கலப்பதாக புகார் வந்ததை அடுத்து, நகராட்சி அதிகாரிகள் சீர் செய்யும் பணிகளில் ஈடுபட்டனர். ஆனால் நகராட்சிகளின் மண்டல நிர்வாக இயக்குனர் ஆய்வு செய்ய வந்த போது, தகவல் தெரிவிக்கவில்லை. வார்டில் எந்த பணிகள் நடந்தாலும், கவுன்சிலருக்கு அதிகாரிகள் முறையாக தகவல் தெரிவிப்பதில்லை.
கூட்ட முடிவில், அ.தி.மு.க., கவுன்சிலர்கள் தனசேகரன், விஜயலட்சுமி ஆகிய இருவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.