/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பள்ளி மேலாண்மை குழு நடப்பாண்டில் மாற்றமில்லை 'சிட்டிங்' குழுவே தொடர்கிறது பள்ளி மேலாண்மை குழு நடப்பாண்டில் மாற்றமில்லை 'சிட்டிங்' குழுவே தொடர்கிறது
பள்ளி மேலாண்மை குழு நடப்பாண்டில் மாற்றமில்லை 'சிட்டிங்' குழுவே தொடர்கிறது
பள்ளி மேலாண்மை குழு நடப்பாண்டில் மாற்றமில்லை 'சிட்டிங்' குழுவே தொடர்கிறது
பள்ளி மேலாண்மை குழு நடப்பாண்டில் மாற்றமில்லை 'சிட்டிங்' குழுவே தொடர்கிறது
ADDED : ஜூன் 08, 2024 12:04 AM
பொள்ளாச்சி,;புதிய கல்வியாண்டு துவங்கியுள்ள நிலையில், அரசு பள்ளிகளில் மேலாண்மை குழு மறு கட்டமைப்பு செய்யப்படாது என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுப்பள்ளிகளின் முன்னேற்றத்துக்காகவும், பள்ளிச் செயல்பாடுகளை மேம்படுத்தவும், கட்டாயக் கல்வி உரிமைச்சட்டப்படி, பள்ளி மேலாண்மைக் குழு உருவாக்கப்படுகிறது. அதில், பெற்றோர்கள், முதன்மை நிர்வாக அலகாகவும், தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் வழிகாட்டும் அங்கத்தினர்களாகவும் செயல்படுகின்றனர்.
அதன்படி, பள்ளி மேலாண்மைக் குழு, இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை மறு கட்டமைப்பு செய்யப்படுகிறது.
அவ்வகையில், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், கடந்த, 2022ல், துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு செய்யப்பட்டது.
தற்போது, இரு ஆண்டுகள் முடிந்து, 2024-25ம் கல்வியாண்டு துவங்கியுள்ளது. இருப்பினும், பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல் இல்லாத நிலையில், அரசு பள்ளிகளில் செயல்படும் மேலாண்மை குழு மறு கட்டமைப்பு செய்யப்படாது; ஏற்கனவே உள்ள உறுப்பினர்களே குழுவில் தொடருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'பள்ளி மேலாண்மை குழுவில், பெரும்பாலும் ஜூனியர் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களே இருப்பர். அதனால், மேலாண்மை குழு மறு கட்டமைப்புக்கு அவசியம் கிடையாது.
அவ்வாறு, மாணவர்கள் வேறு பள்ளிக்கு மாறுதலாகி உறுப்பினர் குறைபாடு ஏற்பட்டாலும் தலைமையாசிரியர்கள் புதிய உறுப்பினரை தேர்ந்தெடுத்துக் கொள்வர், என்றனர்.