/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பி.ஏ.பி., வாய்க்காலில் நீர் திறக்க விவசாயிகள் வேண்டுகோள் பி.ஏ.பி., வாய்க்காலில் நீர் திறக்க விவசாயிகள் வேண்டுகோள்
பி.ஏ.பி., வாய்க்காலில் நீர் திறக்க விவசாயிகள் வேண்டுகோள்
பி.ஏ.பி., வாய்க்காலில் நீர் திறக்க விவசாயிகள் வேண்டுகோள்
பி.ஏ.பி., வாய்க்காலில் நீர் திறக்க விவசாயிகள் வேண்டுகோள்
ADDED : ஜூன் 08, 2024 12:05 AM
- நமது நிருபர் -
பி.ஏ.பி., நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்தாண்டு போதுமான அளவு மழை பெய்யவில்லை. இதனால், பெரும்பாலான அணைகள் பாதி அளவு கூட நிரம்ப வில்லை. நடப்பாண்டு முதல் மண்டல பாசனத்திற்கு இரண்டரை சுற்று தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டது.
கடந்த பிப்., மாதம், திருமூர்த்தி அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இரண்டு சுற்று விடப்பட்ட நிலையில் அணைகளில் தண்ணீர் இருப்பு குறைந்தது. இதனால், தண்ணீர் திறப்பு உடனடியாக நிறுத்தப்பட்டது.
தற்போது, பி.ஏ.பி., தண்ணீர் பாயும் பல்லடம், பொங்கலுார், காங்கயம் உள்ளிட்ட பகுதிகளில் போதுமான அளவு கோடை மழை பெய்யவில்லை.இதனால், தென்னை விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பி.ஏ.பி., பாசன விவசாயிகள் சிலர் கூறியதாவது: பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது, ஒன்பது சுற்றில் இருந்து ஐந்து சுற்றுகளாக குறைக்கப்பட்டது. நடப்பாண்டு அதிலும் பாதியாக குறைத்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு பின் பத்து நாட்கள் மட்டுமே இரண்டு சுற்றுக்களிலும் சேர்த்து தண்ணீர் விடப்பட்டது. தற்போது மழை பெய்ததால் அணைகளுக்கு நீர் வரத்து ஏற்பட்டுள்ளது.
எனவே, நிறுத்தப்பட்ட அரை சுற்றுக்கு பதிலாக ஒரு சுற்று தண்ணீரை முதல் மண்டல பாசனத்திற்கு உடனடியாக திறக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.