/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சேறும், சகதியுமாக மாறிய சாலை; மக்கள் அவதி சேறும், சகதியுமாக மாறிய சாலை; மக்கள் அவதி
சேறும், சகதியுமாக மாறிய சாலை; மக்கள் அவதி
சேறும், சகதியுமாக மாறிய சாலை; மக்கள் அவதி
சேறும், சகதியுமாக மாறிய சாலை; மக்கள் அவதி
ADDED : ஜூலை 18, 2024 12:20 AM

போத்தனூர் : சுந்தராபுரத்திலிருந்து போத்தனூர் செல்லும் சாரதா மில் சாலையில், கடந்த பல மாதங்களாக பாதாள சாக்கடை பணி நடந்தது. பிரதான குழாய், மேன்ஹோல்கள் அமைக்கும் பணி முடிவடைந்த நிலையில், தோண்டப்பட்ட குழிகளில், மெட்டல் கலவை போடப்பட்டது.
மாதங்கள் கடந்த நிலையில், பல இடங்களில் சாலை குண்டும், குழியுமாக மாறியதால் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் அவதிப்படுகின்றனர்.
இந்நிலையில், இச்சாலையை சீரமைக்க நெடுஞ்சாலை துறை சார்பில் டெண்டர் விடப்பட்டது. பணி துவங்காத நிலையில், தற்போது பெய்து வரும் மழையால் சாலை சேறும், சகதியுமாக மாறியுள்ளது. நடந்து செல்வோர் சேறு அபிஷேகத்திற்கு ஆளாகின்றனர். விரைவில் சாலையை சீரமைக்காவிடில், மரக்கன்றுகள் நட, பா.ஜ.,வினர் முடிவு செய்துள்ளனர்,
பாதாள சாக்கடை பணியால், சாலை போடுவது தாமதம் ஆவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர், இதுகுறித்து அப்பணியை மேற்கொள்ளும் நிறுவன அதிகாரியிடம் கேட்டபோது, '90 சதவீத பணி முடிவடைந்துவிட்டது. மகளிர் போலீஸ் ஸ்டேஷன் எதிர் பகுதியில், 10 இணைப்பு கொடுக்கும் பணி மட்டுமே, மேற்கொள்ள வேண்டி உள்ளது. ஆனாலும், சாலை போடுவதற்கு இடையூறு கிடையாது. மழையால் இப்பணி தாமதமாகியுள்ளது' என்றார்.