/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ குழந்தைகளை பத்திரமா பார்த்துக்கோங்க.. நீர்நிலைகள் பக்கம் போக விட்டுறாதீங்க! பெற்றோருக்கு போலீசார் அறிவுரை குழந்தைகளை பத்திரமா பார்த்துக்கோங்க.. நீர்நிலைகள் பக்கம் போக விட்டுறாதீங்க! பெற்றோருக்கு போலீசார் அறிவுரை
குழந்தைகளை பத்திரமா பார்த்துக்கோங்க.. நீர்நிலைகள் பக்கம் போக விட்டுறாதீங்க! பெற்றோருக்கு போலீசார் அறிவுரை
குழந்தைகளை பத்திரமா பார்த்துக்கோங்க.. நீர்நிலைகள் பக்கம் போக விட்டுறாதீங்க! பெற்றோருக்கு போலீசார் அறிவுரை
குழந்தைகளை பத்திரமா பார்த்துக்கோங்க.. நீர்நிலைகள் பக்கம் போக விட்டுறாதீங்க! பெற்றோருக்கு போலீசார் அறிவுரை
ADDED : ஜூலை 18, 2024 12:20 AM

தொண்டாமுத்தூர் : தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் உள்ள நீர்நிலைகளுக்கு, தங்களின் குழந்தைகள் செல்வதை தடுக்க, பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும் என, போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கனமழை காரணமாக, ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்து நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக, நொய்யல் ஆற்றின் முதல் தடுப்பணையான சித்திரைச்சாவடி தடுப்பணையில், வினாடிக்கு 1,200 கன அடி தண்ணீர் வெளியேறி வருகிறது.
நொய்யலாற்றின் கிளை வாய்க்கால்களிலும், தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. நொய்யல் ஆறு மற்றும் அதன் கிளை வாய்க்கால்களை, ஆதார மாகக் கொண்டுள்ள குளங்களிலும் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ஆபத்தை உணராமல், சிறுவர்களும், இளைஞர்களும் நீரில் இறங்கி வருகின்றனர்.
பேரூர் டி.எஸ்.பி., (பொ) முரளி கூறுகையில், பருவ மழை காரணமாக, நொய்யல் ஆறு, வாய்க்கால் மற்றும் குளங்களில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
கடந்த காலங்களில், நீர் நிலைகளில் நீர்வரத்து அதிகரித்த போது, நீரில் இறங்கிய பலர் உயிரிழந்துள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நீர்நிலைகளில், போலீசார் ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர். தங்களின் குழந்தைகள் நீர் நிலைகளுக்கு செல்லாமல் இருப்பதை, பெற்றோர் கண்காணிக்க வேண்டும், என்றார்.