/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஊரக உள்ளாட்சித்தேர்தலில் கட்சிகளின் அடுத்த கவனம் ஊரக உள்ளாட்சித்தேர்தலில் கட்சிகளின் அடுத்த கவனம்
ஊரக உள்ளாட்சித்தேர்தலில் கட்சிகளின் அடுத்த கவனம்
ஊரக உள்ளாட்சித்தேர்தலில் கட்சிகளின் அடுத்த கவனம்
ஊரக உள்ளாட்சித்தேர்தலில் கட்சிகளின் அடுத்த கவனம்
ADDED : ஜூன் 05, 2024 08:42 PM
உடுமலை: லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தல் மீது அரசியல் கட்சிகளின் கவனம் திரும்பியிருக்கிறது.
லோக்சபா தேர்தலில் அரசியல் கட்சிகள் பெற்ற வெற்றி, தோல்வி வாயிலாக, தங்கள் கட்சியின் வளர்ச்சி, வீழ்ச்சியை அரசியல் கட்சியினர் பகுப்பாய்வு செய்ய துவங்கியுள்ளனர்.
இந்த தேர்தல் முடிவு அடிப்படையில் தான், வரும், 2026 சட்டசபை தேர்தலுக்கு கட்சிகள் தயாராக இருக்கின்றன. இதற்கிடையில், இந்தாண்டின் இறுதியில், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கிராம ஊராட்சிகளை உள்ளடக்கிய ஊரக உள்ளாட்சி தேர்தலில், ஊராட்சித்தலைவர், உறுப்பினர்கள் உள்ளிட்ட பதவிகள் அரசியல் சார்பற்று, அரசியல் கட்சிகளின் சின்னம் இல்லாமல், சுயே., சின்னத்தில் தான் வேட்பாளர்கள் போட்டியிடுவர்.
இருப்பினும், அரசியல் கட்சிகளின் பின்புலத்தில் தான், வேட்பாளர்கள் களமிறங்குவர்.
கிராம ஊராட்சிகளை பொறுத்தவரை, அந்தந்த ஊரில், மக்களிடம் செல்வாக்கு பெற்றவர்களே வார்டு கவுன்சிலர், தலைவர்களாக தேர்வாகின்றனர்.
இது, சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலிலும் எதிரொலிக்கும். அந்த வகையில் ஒவ்வொரு தொகுதி மற்றும் பூத் வாரியாக, அரசியல் கட்சிகள் பெற்ற ஓட்டுகளை கணக்கிட்டு, தங்கள் கட்சிக்கான செல்வாக்கை தக்க வைத்துக்கொள்வதில், கவனம் செலுத்த துவங்கியுள்ளன.