/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வெள்ளியங்கிரி மலையில் 3.5 டன் குப்பை அகற்றியது தென்கயிலாய பக்தி பேரவை வெள்ளியங்கிரி மலையில் 3.5 டன் குப்பை அகற்றியது தென்கயிலாய பக்தி பேரவை
வெள்ளியங்கிரி மலையில் 3.5 டன் குப்பை அகற்றியது தென்கயிலாய பக்தி பேரவை
வெள்ளியங்கிரி மலையில் 3.5 டன் குப்பை அகற்றியது தென்கயிலாய பக்தி பேரவை
வெள்ளியங்கிரி மலையில் 3.5 டன் குப்பை அகற்றியது தென்கயிலாய பக்தி பேரவை
ADDED : ஜூன் 04, 2024 01:07 AM

தொண்டாமுத்தூர்;தென்கயிலாய பக்தி பேரவையினர், வெள்ளியங்கிரி மலையில், கடந்த ஒரு மாதமாக, வார இறுதி நாட்களில் தூய்மை பணி மேற்கொண்டதன் மூலம் சுமார், 3.5 டன் குப்பையை சேகரித்து, வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள, தென் கையிலாயம் எனப்படும் வெள்ளியங்கிரி மலை ஏற, வனத்துறையினர், பக்தர்களுக்கு கடந்த, பிப்., 12ம் தேதி முதல் அனுமதி அளித்திருந்தனர்.
தொடர்ந்து, மூன்றரை மாதங்களுக்கு மேலாக, பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்களும் வந்து, ஏழு மலை ஏறி, சுயம்புவாக உள்ள ஈசனை தரிசித்து வந்தனர். இதனால், வெள்ளியங்கிரி மலை பாதையில், குப்பை அதிகரித்தது.
தென்கயிலாய பக்தி பேரவை சார்பில், கடந்த 10 ஆண்டுகளாக, வெள்ளியங்கிரி மலையில், தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தாண்டு, கடந்த, மே 2 முதல் ஜூன் 2ம் தேதி வரை, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளும் தூய்மைப்பணி மேற்கொண்டனர்.
குறிப்பாக, மே 26ம் தேதி நடந்த மெகா தூய்மை பணியில், சென்னை, செங்கல்பட்டு, உத்திரமேரூர், வந்தவாசி, தஞ்சாவூர், திருப்பட்டூர் ஆகிய பல்வேறு பகுதிகளை சேர்ந்த சிவனடியார்கள், தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.
ஏழு மலைகளை கொண்டவெள்ளியங்கிரி மலையில், 6வது மலை வரை, தூய்மை பணியில் ஈடுபட்டனர். ஒரு குழுவினர், மேலோட்டமாக உள்ள குப்பையை சேகரித்தனர்.
மற்றொரு குழுவினர் முழு அளவில் சேகரித்தனர். இந்த தூய்மை பணி மூலம் சுமார், 3.5டன் குப்பை சேகரிக்கப்பட்டு, அடிவாரத்திற்கு கொண்டுவரப்பட்டு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.