/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ குட்டையில் பைக் விழுந்து ஒருவர் பலி குட்டையில் பைக் விழுந்து ஒருவர் பலி
குட்டையில் பைக் விழுந்து ஒருவர் பலி
குட்டையில் பைக் விழுந்து ஒருவர் பலி
குட்டையில் பைக் விழுந்து ஒருவர் பலி
ADDED : ஜூன் 04, 2024 01:06 AM
போத்தனூர்:போத்தனூர் அடுத்து செட்டிபாளையத்திலிருந்து கோவை கார்டன் செல்லும் சாலையில் குட்டை ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் இரவு அவ்வழியே பைக்கில் வந்தவர், நிலைதடுமாறி பைக்குடன் குட்டையில் விழுந்தார்.
அவ்வழியே சென்றோர் அவரை மீட்டு, இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள், வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். செட்டிபாளையம் போலீசார் விசாரணையில், உயிரிழந்தது, பீளமேடு, காந்திமா நகரை சேர்ந்த லட்சுமணன், 29 என்பதும், குருநெல்லிபாளையத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டு, தனது வீட்டிற்கு செல்லும்போது, விபத்து நடந்ததும் தெரிந்தது.