Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கோடை உழவு செய்ய 100 எக்டர் இலக்கு நிர்ணயம்

கோடை உழவு செய்ய 100 எக்டர் இலக்கு நிர்ணயம்

கோடை உழவு செய்ய 100 எக்டர் இலக்கு நிர்ணயம்

கோடை உழவு செய்ய 100 எக்டர் இலக்கு நிர்ணயம்

ADDED : ஜூன் 02, 2024 11:34 PM


Google News
சூலுார்;சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் கோடை உழவு செய்ய, 100 எக்டர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கோடை உழவு செய்ய, விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வேளாண்துறை மானியம் வழங்குகிறது. இதுகுறித்து சுல்தான்பேட்டை வட்டார வேளாண் அதிகாரிகள் கூறியதாவது:

கோடை உழவு செய்தால் பல பயன்களை பெறலாம். மண்ணில் உள்ள புழுக்களின் முட்டைகளை அழிக்கலாம். இதன் மூலம், அடுத்த சாகுபடிக்கு நிலத்தை தயார் செய்யமுடியும். சுல்தான்பேட்டை வட்டாரத்தில் கோடை உழவு செய்ய, 100 எக்டர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ், ஒரு எக்டருக்கு, 2 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது. மானியம் பெற, உழவு செய்யப்பட்ட நிலத்தின் படம், ஆதார் நகல், சிட்டா, வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை வேளாண் விரிவாக்க மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். முன்னுரிமை அடிப்படையில் மானியம் வழங்கப்பட உள்ளது. மேலும், கோடை உழவு பணி மேற்கொண்ட விவசாயிகளுக்கு, மானிய விலையில் விதைகள், நுண்ணூட்ட உரம் ஆகியன வழங்கப்படும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us