/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கோவை அரசு பொருட்காட்சியில் சர்க்கரை பொங்கல், புளியோதரை! கோவை அரசு பொருட்காட்சியில் சர்க்கரை பொங்கல், புளியோதரை!
கோவை அரசு பொருட்காட்சியில் சர்க்கரை பொங்கல், புளியோதரை!
கோவை அரசு பொருட்காட்சியில் சர்க்கரை பொங்கல், புளியோதரை!
கோவை அரசு பொருட்காட்சியில் சர்க்கரை பொங்கல், புளியோதரை!
ADDED : ஜூன் 04, 2024 11:50 PM

கோவை;கோவையில் நடைபெறும் அரசு பொருட்காட்சியை காண வரும் பொதுமக்களுக்கு, அன்றாடம் சர்க்கரை பொங்கலும், புளியோதரையும் வழங்கப்படுகிறது.
கோவை வ.உ.சி.,பூங்கா மைதானத்தில், அரசு பொருட்காட்சி நடந்து வருகிறது. இதில் 27 அரசுத்துறைகள், 7 அரசு சார்பு நிறுவனங்கள் சார்பில், 34 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் அந்தந்த துறை சார்ந்த தகவல்கள் வழங்கப்படுகின்றன.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நிறுவப்பட்டுள்ள அரங்கில், சுவாமி சிலை நிறுவப்பட்டுள்ளது. அதோடு, கோவையிலுள்ள திருக்கோவில்கள் பற்றிய முழுமையான தகவல்களும் வழங்கப்படுகின்றன.
அரங்கில் உள்ள சுவாமியை வணங்கி, வெளியேறுவோருக்கு இனிப்பு பொங்கல் மற்றும் புளியோதரை பிரசாதமாக வழங்கப்படுகிறது.
கோவையிலுள்ள முக்கிய வழிபாட்டு தலங்களின் சிறப்பு குறித்தும், அதற்கு எப்படி செல்வது என்பது குறித்து வழித்தட வரைபடம் வைக்கப்பட்டுள்ளது.
சுவாமியை எப்படி வழிபடுவது என்பது குறித்து, சிவாச்சாரியர்கள் மற்றும் பட்டர்கள் விளக்குகின்றனர்.பெயர், நட்சத்திரம் கூறினால், சுவாமிக்கு சிறப்பு அர்ச்சனை செய்து, உடனுக்குடன் பிரசாதம் வழங்கப்படுகிறது.