ADDED : ஜூன் 04, 2024 11:50 PM

சூலூர்:காங்கயம்பாளையம் ஸ்ரீ சென்னியாண்டவர் கோவில் ஆண்டு விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
சூலூர் அடுத்த காங்கயம்பாளையத்தில் உள்ள, ஸ்ரீ சென்னி யாண்டவர் கோவில் பழமையானது. இங்கு, இரண்டாம் ஆண்டு விழா பூஜைகள், திருவிளக்கு பூஜை மற்றும் விநாயகர் வழிபாட்டுடன் துவங்கின.
புனித நீர் கலசங்கள் வைக்கப்பட்டு, வருண, கலச பூஜை நடந்தது. பல்வேறு மூலிகைகளை கொண்டு, ஹோமம் மற்றும் பூர்ணாகுதிநடந்தது.
பால், தயிர், பஞ்சாமிர்தம், பன்னீர், தேன், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் முருகனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
மகா தீபாராதனைக்குப்பின், ஸ்ரீ சென்னி யாண்டவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.