/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ காலியிடம் நிரப்ப கோரி கால் நீட்டி போராட்டம்! கோவை மண்டல மின்வாரியத்தில் 8,000 பணியிடம் காலி காலியிடம் நிரப்ப கோரி கால் நீட்டி போராட்டம்! கோவை மண்டல மின்வாரியத்தில் 8,000 பணியிடம் காலி
காலியிடம் நிரப்ப கோரி கால் நீட்டி போராட்டம்! கோவை மண்டல மின்வாரியத்தில் 8,000 பணியிடம் காலி
காலியிடம் நிரப்ப கோரி கால் நீட்டி போராட்டம்! கோவை மண்டல மின்வாரியத்தில் 8,000 பணியிடம் காலி
காலியிடம் நிரப்ப கோரி கால் நீட்டி போராட்டம்! கோவை மண்டல மின்வாரியத்தில் 8,000 பணியிடம் காலி
ADDED : ஜூலை 09, 2024 11:26 PM

கோவை;'மின்வாரியத்தில், கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளடக்கிய கோவை மண்டலத்தில் மட்டும், 8,000த்துக்கு மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன' என, தொடர் காத்திருப்பு போராட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
தமிழக மின்வாரியத்தில், நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத கோரிக்கைகளை முன்வைத்து, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில், நேற்று மாநிலம் முழுவதும் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
கோவையில், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின், கோவை வடக்கு, தெற்கு, மாநகர் கிளைகள் சார்பில், டாடாபாத் தலைமை பொறியாளர் அலுவலகம் முன் நடந்த தொடர் காத்திருப்பு போராட்டத்துக்கு, மாநகர் தலைவர் மதுசூதனன் தலைமை வகித்தார்.
மண்டல செயலாளர் கோபாலகிருஷ்ணன் கூறியதாவது:
மின்வாரியத்தில், கள உதவியாளர், இளநிலை உதவியாளர், கணக்கீட்டாளர், தொழில்நுட்ப உதவியாளர், உதவி மின் பொறியாளர், வரைவாளர் போன்ற, ஆரம்ப நிலையில், 33 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள், நிரப்பப்படாமல் உள்ளன.
நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளடக்கிய கோவை மண்டலத்தில் மட்டும் 8,000த்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதனால், மின்தடையை விரைவாக நீக்க முடியாத நிலை ஏற்படுகிறது.
அரசாணை 100ல் ஏற்படுத்தப்பட்ட முத்தரப்பு ஒப்பந்தத்தில், இருக்கும் அநீதிகளை களைந்து அரசு உத்தரவாதத்துடன் கூடிய ஒப்பந்தத்தை ஏற்படுத்திட வேண்டும்.
வெளியான மின்வாரிய பிரிப்பு, தொடர்பான அரசாணை 6 மற்றும் 7 கைவிடப்பட வேண்டும் என்பன உட்பட 20ம் அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
மாநில செயலாளர் மணிகண்டன், கோவை வடக்கு செயலாளர் மணிகண்டன், தெற்கு செயலாளர் ரத்தினகுமார், மாவட்ட சி.ஐ.டி.யு., செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொறியாளர் அமைப்பின் நிர்வாகி சோமசுந்தரம் உட்பட 650க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.