/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மாநிலளவிலான நீச்சல் போட்டி; கோவை மாணவருக்கு பதக்கம் மாநிலளவிலான நீச்சல் போட்டி; கோவை மாணவருக்கு பதக்கம்
மாநிலளவிலான நீச்சல் போட்டி; கோவை மாணவருக்கு பதக்கம்
மாநிலளவிலான நீச்சல் போட்டி; கோவை மாணவருக்கு பதக்கம்
மாநிலளவிலான நீச்சல் போட்டி; கோவை மாணவருக்கு பதக்கம்
ADDED : ஜூலை 18, 2024 12:14 AM

கோவை : சென்னையில் நடந்த மாநில அளவிலான நீச்சல் போட்டியில், கோவை பள்ளி மாணவர் நான்கு பதக்கங்கள் வென்று, தேசிய போட்டிக்கு தகுதி பெற்றார்.
தமிழ்நாடு மாநில அகுவாடிக் சங்கம் சார்பில், 40வது சப் - ஜூனியர் மற்றும் 50வது ஜூனியர் மாநில நீச்சல் போட்டிகள், சென்னை, வேளச்சேரியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நீச்சல் குளத்தில் நடந்தது.
மாணவ - மாணவியருக்கு, மூன்று பிரிவுகளின் கீழ் பிரீ ஸ்டைல், பேக் ஸ்ட்ரோக், பிரஸ்ட் ஸ்ட்ரோக், பட்டர்பிளை, மெட்லி, ரிலே என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இப்போட்டியில், 12 - 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில், கோவை இந்துஸ்தான் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த கபிலன் பங்கேற்றார்.
கபிலன், 200மீ., பேக் ஸ்ட்ரோக் பிரிவில் தங்கமும், 200மீ., பிரீ ஸ்டைல், 400மீ., பிரீ ஸ்டைல், 100மீ., பேக் ஸ்ட்ரோக் ஆகிய போட்டிகளில் வெள்ளியும் வென்றார்.
இதன் மூலம், புவனேஸ்வரில் நடக்கவுள்ள தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் தமிழகம் சார்பில் பங்கேற்க தேர்வாகியுள்ளார். வெற்றி பெற்ற மாணவர் கபிலனை, பயிற்சியாளர் ஸ்ரீஷ்ரெட்டி, பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் பாராட்டினர்.