/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மாநில கூடைப்பந்து ; வீரர்கள் அபாரம் மாநில கூடைப்பந்து ; வீரர்கள் அபாரம்
மாநில கூடைப்பந்து ; வீரர்கள் அபாரம்
மாநில கூடைப்பந்து ; வீரர்கள் அபாரம்
மாநில கூடைப்பந்து ; வீரர்கள் அபாரம்
ADDED : ஜூலை 20, 2024 11:52 PM

கோவை:மாநில அளவிலான சீனியர் ஆண்கள் கூடைப்பந்து போட்டியில், வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
பி.எஸ்.ஜி., ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 'பி.எஸ்.ஜி., கோப்பைக்கான' 8ம் ஆண்டு மாநில கூடைப்பந்து போட்டி, பி.எஸ்.ஜி., டெக் கல்லுாரி வளாகத்தில் உள்ள பி.எஸ்.ஜி., உள்விளையாட்டு அரங்கில் நடக்கிறது.
இதன் காலிறுதிப்போட்டியில், லயோலா கூடைப்பந்து கிளப் அணி 112 - 58 என்ற புள்ளிக்கணக்கில் டெக்சிட்டி கூடைப்பந்து கிளப் அணியையும், சென்னை எஸ்.டி.ஏ.டி., அணி 116 - 95 என்ற புள்ளிக்கணக்கில், ராஜலட்சுமி மில்ஸ் அகாடமியையும், சிக்ஸர்ஸ் அகாடமி அணி 75 - 66 என்ற புள்ளிக்கணக்கில், கே.சி.டி., அகாடமியையும், யுனைடெட் கூடைப்பந்து கழக அணி 78 - 56 என்ற புள்ளிக்கணக்கில், எஸ்.பி.ஓ.ஏ., கூடைப்பந்து கழக அணியையும் வீழ்த்தி, லீக் சுற்றுக்கு முன்னேறின.