/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ராமகிருஷ்ணா மருத்துவமனை ஊழியர்களுக்கு விளையாட்டு போட்டி ராமகிருஷ்ணா மருத்துவமனை ஊழியர்களுக்கு விளையாட்டு போட்டி
ராமகிருஷ்ணா மருத்துவமனை ஊழியர்களுக்கு விளையாட்டு போட்டி
ராமகிருஷ்ணா மருத்துவமனை ஊழியர்களுக்கு விளையாட்டு போட்டி
ராமகிருஷ்ணா மருத்துவமனை ஊழியர்களுக்கு விளையாட்டு போட்டி
ADDED : ஜூன் 05, 2024 12:19 AM

கோவை:ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
மருத்துவமனை தின விழாவை முன்னிட்டு, ஊழியர்களுக்கு த்ரோபால், டேபிள் டென்னிஸ், செஸ், கேரம், கால்பந்து, கிரிக்கெட், வாலிபால் உள்ளிட்ட போட்டிகள் நடைபெறுகின்றன.
அதன் ஒரு பகுதியாக, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தடகள போட்டி, வட்டமலைபாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஜி., கல்லூரி வளாகத்தில் நடந்தது.
இதில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு 100மீ., 200மீ., 800மீ., 1500மீ., தொடர் ஓட்டம், குண்டு எறிதல், வட்டு எறிதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.
வெற்றி பெற்ற ஊழியர்களுக்கு, மருத்துவமனை மனிதவள மேம்பாட்டு அலுவலர் விஜயகுமார் பரிசுகளை வழங்கினார். போட்டிக்கான ஏற்பாடுகளை, ராமகிருஷ்ணா இன்ஜி., கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் நித்தியானந்தன் செய்திருந்தார்.