/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பத்து, பிளஸ் 2 படித்தவர்களுக்கு ஸ்பின்னிங் தொழில்நுட்ப பயிற்சி பத்து, பிளஸ் 2 படித்தவர்களுக்கு ஸ்பின்னிங் தொழில்நுட்ப பயிற்சி
பத்து, பிளஸ் 2 படித்தவர்களுக்கு ஸ்பின்னிங் தொழில்நுட்ப பயிற்சி
பத்து, பிளஸ் 2 படித்தவர்களுக்கு ஸ்பின்னிங் தொழில்நுட்ப பயிற்சி
பத்து, பிளஸ் 2 படித்தவர்களுக்கு ஸ்பின்னிங் தொழில்நுட்ப பயிற்சி
ADDED : ஜூன் 08, 2024 01:39 AM
கோவை:எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 படித்தவர்களுக்கு, சிட்ரா (தென்னிந்திய பயிற்சி மற்றும் ஆராய்ச்சி சங்கம்) ஸ்பின்னிங் மற்றும் தொழில் நுட்ப ஜவுளிப்பயிற்சி அளிக்கிறது.
தமிழ்நாட்டின் ஜவுளித்துறையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக தமிழக அரசு துணிநுால் துறை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் வழிகாட்டுதலின்படி தென்னிந்திய பயிற்சி மற்றும் ஆராய்ச்சி சங்கத்தின் (சிட்ரா) மூலமாக எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 முடித்த வேலைவாய்ப்பு இல்லாதவர்களுக்கு, ஸ்பின்னிங் மற்றும் தொழில்நுட்பஜவுளிப் பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
பயிற்சி பெற விரும்புபவர்கள்,https://tntextiles.tn.gov.in/jobs/என்ற இணையதள முகவரியில் தங்களது விபரங்களை, பதிவு செய்து பயன்பெறலாம்.
இது குறித்த விபரங்களுக்கு, 'ஜவுளிதுறை, மண்டல துணை இயக்குநர், எண். 502, 5-வது தளம், கலெக்டர் அலுவலகம், திருப்பூர்- 641604' என்ற முகவரியிலோ,-rddtextilestpr@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ, 0421-2220095 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.