/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ செயற்கை நுண்ணறிவு முதல் துல்லிய செயல்பாடுகள் வரை! 'இன்டெக் 2024' கண்காட்சியில் அசத்தல் செயற்கை நுண்ணறிவு முதல் துல்லிய செயல்பாடுகள் வரை! 'இன்டெக் 2024' கண்காட்சியில் அசத்தல்
செயற்கை நுண்ணறிவு முதல் துல்லிய செயல்பாடுகள் வரை! 'இன்டெக் 2024' கண்காட்சியில் அசத்தல்
செயற்கை நுண்ணறிவு முதல் துல்லிய செயல்பாடுகள் வரை! 'இன்டெக் 2024' கண்காட்சியில் அசத்தல்
செயற்கை நுண்ணறிவு முதல் துல்லிய செயல்பாடுகள் வரை! 'இன்டெக் 2024' கண்காட்சியில் அசத்தல்

மூடப்பட்ட ஸ்டைலில் லேத்
குறிப்பாக, இரும்பிலிருந்து பொருட்களை உருவாக்கும் லேத்கள், கோவையிலேயே தயாரிக்கப்படுகின்றன. லட்சுமி மெஷின்ஸ் நிறுவனம் தயாரிக்கும், அதிநவீன கம்ப்யூட்டரில் இயக்கப்படும் பல தொழில்நுட்ப பொருட்களை செய்யும் லேத்துக்கள், அனைவரையும் கவர்ந்துள்ளன.
பிரமிக்க வைக்கும் ரோபோட்டுகள்
சர்வதேச அளவில் பொருட்களை உற்பத்தி செய்வதில், மனித உழைப்பு குறைந்து வருகிறது. மனித மூளைக்கு மட்டுமே வேலை கொடுத்து விட்டு, இயந்திரங்களில் பொருட்களை உருவாக்கி விடுகின்றனர்.
செயற்கை நுண்ணறிவு
தொழிற்சாலைகளை தானியங்கி முறையில், இயங்க வைக்கும் முயற்சியில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
கட்டுமான இயந்திரங்கள்
மிகவும் துல்லியமாகவும், பளபளப்பாகவும், கவர்ச்சிகரமாகவும், கற்பனைக்கு அப்பாற்பட்ட வீடுகளை உருவாக்குவதில் கையடக்க கருவிகள் பெரிதும் உதவுகின்றன. கட்டுமானத்தில், துளையிடுதல், பாலீஷ் செய்தல், துாசுகளை கவர்தல், கடினமான உலோக பொருட்களை வெட்டுதல், பளபளப்பாக்குதல் என சிறு சிறு இயந்திரங்கள் பெரும் வேலைகளை முடிக்கின்றன. நுாற்றுக்கும் மேற்பட்ட வேலைகளுக்கு, பல்வேறு விதமான கருவிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
தண்ணீர் தீர்வு தரும் இயந்திரங்கள்
பொதுவாக தண்ணீரை துாய்மையாக்கி தரும் இயந்திரங்கள் உள்ளன. ஆனால், எந்த அளவுக்கு தண்ணீர் துாய்மையாக உள்ளது, தண்ணீரின் அமில, காரத்தன்மை என்ன என்பதையும் காட்டும் கருவியோடு, பில்டர்கள் பொதுமக்களை கவர்ந்துள்ளன.
ஒரு விசிட் அடிக்கலாம்!
இதுபோன்ற எண்ணற்ற கருவிகளும், இயந்திரங்களும், பயன்பாட்டு பொருட்களும், 'இன்டெக் 2024' கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.