Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ முட்டை பப்ஸ் சாப்பிட்ட 'ஸ்பைடர் மேன்!'

முட்டை பப்ஸ் சாப்பிட்ட 'ஸ்பைடர் மேன்!'

முட்டை பப்ஸ் சாப்பிட்ட 'ஸ்பைடர் மேன்!'

முட்டை பப்ஸ் சாப்பிட்ட 'ஸ்பைடர் மேன்!'

ADDED : ஜூலை 14, 2024 01:13 AM


Google News
Latest Tamil News
அந்த காலத்தில், சாலைகளின் இருபுறமும் மரங்கள்,எங்கு பார்த்தாலும் பசுமை...இப்படி, இயற்கை எழில் கொஞ்சும் நகரமாக கோவை இருந்தது, என வீட்டில் உள்ள தாத்தா, பாட்டிகள் சொல்லி மட்டுமே கேட்டுள்ளனர் 2கே கிட்ஸ்.

2கே கிட்ஸ் பார்க்காத கோவையையும், நம் தாத்தா, பாட்டிகள் பார்க்க முடியாத கோவையையும் ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி, தத்ரூபமான படங்களாகஉருவாக்கப்பட்டுள்ளது.

இணையத்தை ஆக்கிரமித்துள்ள, இவ்வகை படங்கள் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

90 மற்றும் அதற்கு முன் பிறந்தவர்களுக்கு மட்டுமே தெரியும் கோவை பொள்ளாச்சி, அவிநாசி சாலை மற்றும் மேட்டுபாளையம் சாலையில் பயணிப்பது எப்படி இருக்கும் என்பது.

அந்த பசுமையை கண்முன் நிறுத்தும் வகையில், நொய்யல் ஆறு, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் சாலைகள், ஏ.ஐ., தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளன.

கோனியம்மன் கோவில் தேரோட்டத்தில் கேப்டன் அமெரிக்கா, அயன் மேன் பங்கேற்பது, பேரூர் கல்யாணி யானையிடம் பேட்மேன் ஆசிர்வாதம் வாங்குவது, மருதமலை கோவில் வழியாக, மெட்ரோ ரயில் செல்வது போன்ற படங்களை பார்க்கும் போது வியப்பாக உள்ளது.

இதேபோல், ஸ்பைடர் மேன், கோவையில் பருப்பு சாதம் சாப்பிடுவது போலவும், அரோமா பேக்கரியில் முட்டை பப்ஸ் சாப்பிடுவது போலவும், படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

அழிந்து போன பலவற்றை, கண்முன் நிறுத்தும் வகையில் ஏ.ஐ., பயன்படுத்தப்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த படங்கள், பலரின் மனதை கவர்ந்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us