/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மீண்டும் மோடி பிரதமராக வேண்டி சிறப்பு பூஜை மீண்டும் மோடி பிரதமராக வேண்டி சிறப்பு பூஜை
மீண்டும் மோடி பிரதமராக வேண்டி சிறப்பு பூஜை
மீண்டும் மோடி பிரதமராக வேண்டி சிறப்பு பூஜை
மீண்டும் மோடி பிரதமராக வேண்டி சிறப்பு பூஜை
ADDED : ஜூன் 03, 2024 11:14 PM

மேட்டுப்பாளையம்;பிரதமர் மோடி மீண்டும் 3 வது முறையாக பிரதமராக வேண்டும் என தமிழக பா.ஜ.,வின் மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி காரமடையில் சிறப்பு பூஜையில் ஈடுபட்டார்.
லோக்சபா தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளன. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட உள்ளன. இதனிடையே கோவை மாவட்டம் காரமடை அடுத்துள்ள கண்டியூர் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில், நேற்று முன் தினம் தமிழக பா.ஜ.,வின் மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஹோமம் வளர்த்து, சிறப்பு சிவ காளி பூஜை மற்றும் கோ பூஜை செய்து வழிபட்டார்.
இதுகுறித்து பா.ஜ., நிர்வாகிகள் கூறுகையில், 'பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் மத்தியில் பா.ஜ., ஆட்சி அமைய வேண்டும். மோடி 3 ஆம் முறையாக பிரதமராக வர வேண்டும் என சிறப்பு பூஜையில் சுதாகர் ரெட்டி ஈடுபட்டார், என்றனர்.
---சூலுார்
கோவை வடக்கு மாவட்டம், சூலூர் வடக்கு ஒன்றிய பா.ஜ., மற்றும் கருமத்தம்பட்டி மண்டல பா.ஜ., சார்பில், கருமத்தம்பட்டி அடுத்த சென்னியாண்டவர் கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. மூன்றாவது முறையாக, நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்கவும், கோவை லோக்சபா வேட்பாளரும், பா.ஜ., மாநில தலைவருமான அண்ணாமலை வெற்றி பெறவும் வேண்டி, பா.ஜ.,வினர் வழிபட்டனர்.
மாவட்ட பொதுச்செயலாளர் சத்தியமூர்த்தி, மகளிரணி தலைவர் ரேவதி, மாவட்ட செயலாளர் மாணிக்கவாசகம், விவசாய அணி தலைவர் பெரியசாமி, மண்டல தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.