/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தென்மாநில கேரம் விளையாட்டு கோவை மாற்றுத்திறனாளி வெற்றி தென்மாநில கேரம் விளையாட்டு கோவை மாற்றுத்திறனாளி வெற்றி
தென்மாநில கேரம் விளையாட்டு கோவை மாற்றுத்திறனாளி வெற்றி
தென்மாநில கேரம் விளையாட்டு கோவை மாற்றுத்திறனாளி வெற்றி
தென்மாநில கேரம் விளையாட்டு கோவை மாற்றுத்திறனாளி வெற்றி
ADDED : ஜூலை 07, 2024 10:16 PM

கோவை;மதுரையில் நடந்த தென்மாநில கேரம் விளையாட்டு போட்டியில், கோவை மாற்றுத்திறனாளி வெற்றி பெற்றார்.
ஜி.எம்.எஸ்., பவுண்டேஷன் சார்பில், தென்மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகள் உள் அறங்க விளையாட்டு போட்டி, மதுரையில் நடைபெற்றது.
இதில் கோவை சின்னியம்பாளையத்தை சேர்ந்த, 3வது வார்டு ஊராட்சி மன்ற உறுப்பினர் அசோக்குமார், 35, மாற்றுத்திறனாளிகள் சங்கம் வாயிலாக கலந்து கொண்டார். கை, கால் பாதிப்பு பிரிவில் கேரம் விளையாட்டில் கலந்து கொண்ட அசோக்குமார், இறுதி போட்டிக்கு முன்னேறினார்.
இறுதி போட்டியில், அசோக்குமார் வெற்றி பெற்றார். அவருக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழும், ரொக்க பரிசாக ரூ.3 ஆயிரமும் வழங்கப்பட்டது. கோவை திரும்பிய அவரை, அனைவரும் வாழ்த்தி வரவேற்றனர்.