/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மானியத்துடன் பட்டுக்கூடு உற்பத்தி வழிகாட்டுது பட்டு வளர்ச்சித்துறை மானியத்துடன் பட்டுக்கூடு உற்பத்தி வழிகாட்டுது பட்டு வளர்ச்சித்துறை
மானியத்துடன் பட்டுக்கூடு உற்பத்தி வழிகாட்டுது பட்டு வளர்ச்சித்துறை
மானியத்துடன் பட்டுக்கூடு உற்பத்தி வழிகாட்டுது பட்டு வளர்ச்சித்துறை
மானியத்துடன் பட்டுக்கூடு உற்பத்தி வழிகாட்டுது பட்டு வளர்ச்சித்துறை
ADDED : ஜூன் 20, 2024 05:11 AM

விவசாயிகள், பட்டு விவசாயம் செய்து நல்ல லாபம் ஈட்ட முடியும் என, பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் திலகவதி தெரிவித்தார்.
தமிழகத்தில், கோவை, சேலம், தேனி மாவட்டங்களில், 20க்கும் மேற்பட்ட இடங்களில், தமிழக அரசின் பட்டு வளர்ச்சித்துறையின் கீழ், பட்டு விற்பனை அங்காடிகள் செயல்பட்டு வருகின்றன. விவசாயிகள் உற்பத்தி செய்து பட்டுக்கூடுகளை இங்கு, நேரடியாக விற்பனைசெய்ய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தென்னையை போன்று, தொடர் வருமானத்தை தரும் இத்தொழிலை குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் நிலம் கொண்ட விவசாயிகள், யார் வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம். 22 நாட்களில் வருமானத்தை பெற முடியும். கோவை மாவட்டத்தில், பொள்ளாச்சி, உடுமலை உள்ளிட்ட பகுதிகளில், நாளொன்றுக்கு, 1 முதல் 2 டன் பட்டுக்கூடு விற்பனையாகிறது.
கோவை மாவட்ட பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் திலகவதி கூறுகையில், ''கோவையில் அன்னுார், தொண்டாமுத்துார், மதுக்கரை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில், விவசாயிகள் பட்டுக்கூடு உற்பத்தி செய்கின்றனர்.
விவசாயிகளுக்கு, மாநில அரசு மட்டுமின்றி மத்திய அரசும், நடவு, பட்டுப்புழு மனை அமைக்க என மானியங்களை தருகிறது. பட்டு விவசாயத்தின் வாயிலாக, குறுகிய காலத்திலேயே, லாபத்தை பெறமுடியும்.
பட்டு வளர்ப்பு குறித்து, அரசு தரப்பில் ஒசூரில் பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது. பட்டு விவசாயத்தில் ஈடுபட ஆர்வமுள்ளவர்கள், மாவட்ட பட்டுவளர்ச்சித்துறையை அணுகலாம்,'' என்றார்.
- நமது நிருபர் -