/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கோவில் முன் கழிவுநீர்: பக்தர்கள் அதிருப்தி கோவில் முன் கழிவுநீர்: பக்தர்கள் அதிருப்தி
கோவில் முன் கழிவுநீர்: பக்தர்கள் அதிருப்தி
கோவில் முன் கழிவுநீர்: பக்தர்கள் அதிருப்தி
கோவில் முன் கழிவுநீர்: பக்தர்கள் அதிருப்தி
ADDED : ஜூலை 20, 2024 12:15 AM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி தெப்பக்குளம் வீதி கோவில் முன், கழிவுநீர் தேங்கி நிற்பதால் பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பொள்ளாச்சி தெப்பக்குளம் வீதியில் ராஜகணபதி கோவில் உள்ளது. இங்கு, ராமர் கோவில் வீதி, தெப்பக்குளம் வீதி மற்றும் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த பக்தர்கள் அதிகளவு வந்து செல்கின்றனர்.
கோவில் முன், கடந்த சில நாட்களாக கழிவுநீர் குளம் போல தேங்கி நிற்கிறது. இதனால், கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
பொதுமக்கள் கூறியதாவது:
பக்தர்கள் கோவிலுக்குள் செல்லும் வழித்தடத்தில், கழிவுநீர் குளம் போன்று தேங்கி நிற்கிறது. கோவில் அருகே உள்ள கால்வாய் முறையாக துார்வாரப்படாமல் உள்ளதால், கழிவுநீர் தேங்குகிறது. கோவிலுக்கு யாரும் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும், கோவில் அருகே ராமர் கோவில் வீதி மற்றும் தெப்பக்குளம் வீதி சந்திப்பு பகுதியிலும் கழிவுநீர் தேங்கி நிற்பதால், குழந்தைகள் பள்ளி வாகனத்தில் ஏற முடியாமல் அவதிப்படுகின்றனர்.
கழிவுநீர் தேக்கத்தால், தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இது குறித்து பலமுறை கோரிக்கை விடுத்தும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி சாக்கடை கால்வாயை துார்வார வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.