/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பள்ளி மேலாண்மை குழு புதிய உறுப்பினர்கள் தேர்வு பள்ளி மேலாண்மை குழு புதிய உறுப்பினர்கள் தேர்வு
பள்ளி மேலாண்மை குழு புதிய உறுப்பினர்கள் தேர்வு
பள்ளி மேலாண்மை குழு புதிய உறுப்பினர்கள் தேர்வு
பள்ளி மேலாண்மை குழு புதிய உறுப்பினர்கள் தேர்வு
ADDED : ஜூலை 08, 2024 12:32 AM
பெ.நா.பாளையம்:அரசு பள்ளி மேலாண்மை குழுக்களுக்கு, புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்ய, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக அரசு பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் இயங்கி வரும் பள்ளி மேலாண்மை குழுக்கள் கடந்த, 2022ம் ஆண்டு மறு கட்டமைப்பு செய்யப்பட்டது.
பள்ளி மேலாண்மை குழுவின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், 2024--26ம் ஆண்டுக்கான மேலாண்மை குழுவுக்கு, புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது.
புதிய உறுப்பினர்களை ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தேர்வு செய்ய வேண்டும். குழுவுக்கு, பெற்றோர் ஒருவர் தலைவராக இருக்க வேண்டும். தலைமை ஆசிரியர் ஒருங்கிணைப்பாளராக செயல்பட வேண்டும்.
பெற்றோர், ஆசிரியர், உள்ளாட்சி பிரதிநிதிகள், கல்வியாளர், சுய உதவி குழு உறுப்பினர், முன்னாள் மாணவர்கள் என மொத்தம், 24 பேர் இக்குழுவில் இடம் பெற வேண்டும்.
அதில், 18 பேர் பெற்றோராகவும், மொத்த உறுப்பினர்களில், 12 பேர் பெண்களாகவும் இருக்க வேண்டும்.
மேலும், பள்ளியின் தலைமை ஆசிரியரே உறுப்பினர்களை தேர்வு செய்யும் அலுவலராக இருந்து தேர்வு செய்ய வேண்டும் என, புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாக, அரசு பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.