/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஐ.ஏ.எஸ்., அகாடமி கல்லுாரியில் துவக்கம் ஐ.ஏ.எஸ்., அகாடமி கல்லுாரியில் துவக்கம்
ஐ.ஏ.எஸ்., அகாடமி கல்லுாரியில் துவக்கம்
ஐ.ஏ.எஸ்., அகாடமி கல்லுாரியில் துவக்கம்
ஐ.ஏ.எஸ்., அகாடமி கல்லுாரியில் துவக்கம்
ADDED : ஜூலை 08, 2024 12:32 AM

சூலுார்;சூலூர் ஆர்.வி.எஸ்., கலை அறிவியல் கல்லூரியில், அரசு மற்றும் ஆட்சி முறை செயல் திட்டத்திற்கான பத்மாவதி ஐ.ஏ.எஸ்., அகாடமி துவக்க விழா நடந்தது.
கல்வி குழுமத்தின் நிர்வாக அறங்காவலர் செந்தில் கணேஷ் தலைமை வகித்து பேசுகையில், ''அரசு மற்றும் ஆட்சி முறை திட்டத்தின் வாயிலாக, அரசு பற்றிய அறிமுகம், அதிகாரத்துவம், தலைமைத்துவ பண்பை வளர்த்தல் உள்ளிட்டவை குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
அதன்பின் அவர்களுக்கு யு.பி.எஸ்.சி., டி.என்.பி.எஸ்.சி., உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு ஊக்கத்தொகையுடன் பயிற்சி அளிக்கப்படும். இதனால், கிராமப்புற மாணவர்கள் அரசு வேலைவாய்ப்புகளை பெறமுடியும்,'' என்றார்.
முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி கல்பனா தனியார் நிறுவன தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் அகாடமியை துவக்கி வைத்தனர். கல்லூரி தாளாளர் வித்யா லட்சுமி, முதல்வர் சிவக்குமார் மற்றும் பலர் பங்கேற்றனர்.