/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கலெக்டர் அலுவலகத்தில் சேலை வியாபாரம்! அதிகாரிகளின் ஆதரவுடன் ஜோர் வியாபாரம் கலெக்டர் அலுவலகத்தில் சேலை வியாபாரம்! அதிகாரிகளின் ஆதரவுடன் ஜோர் வியாபாரம்
கலெக்டர் அலுவலகத்தில் சேலை வியாபாரம்! அதிகாரிகளின் ஆதரவுடன் ஜோர் வியாபாரம்
கலெக்டர் அலுவலகத்தில் சேலை வியாபாரம்! அதிகாரிகளின் ஆதரவுடன் ஜோர் வியாபாரம்
கலெக்டர் அலுவலகத்தில் சேலை வியாபாரம்! அதிகாரிகளின் ஆதரவுடன் ஜோர் வியாபாரம்
ADDED : ஜூலை 25, 2024 12:21 AM

கோவை, : கோவை கலெக்டர் அலுவலகத்தில் உணவு, உடை, உள்ளாடை, பிளாஸ்டிக் பொருட்கள், பட்டுசேலை உள்ளிட்டவற்றை கடைவிரித்தும், டீ, காபி, சுண்டலை இருக்கைக்கே கொண்டு சென்றும், விற்பனை செய்கின்றனர்.
கோவை கலெக்டர் அலுவலகத்தில், 20க்கும் மேற்பட்ட அரசு துறை அலுவலகங்கள் செயல்படுகின்றன.
அலுவலகங்களுக்கு வரும் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோரை குறி வைத்தே, வியாபாரம் நடக்கிறது.
காலை 9:00 மணிக்கு துவங்கும் வியாபாரம், இரவு 7:00 மணி வரை தொடர்கிறது. காலையில் உணவு எடுத்துக்கொள்ளாமல் அவசரகதியில் வரும் பணியாளர்களுக்கு ஏதுவாக, இட்லி, சேவை, சப்பாத்தி, பொங்கல், ஊத்தப்பம் ஆகியவை சுடச்சுட ஹாட்பாக்சில் வைத்து, சாம்பார், சட்னியுடன் வழங்கப்படுகிறது.
டிபன் கொடுக்கும் வியாபாரிகளின், மொபைல் எண் அனைத்து பணியாளர்களிடமும் இருப்பதால், துறை வாரியாக பணியாளர்களின் சீட்டிற்கே, உணவு போய் எளிதாக சேர்ந்து விடுகிறது.
உணவுக்கு பின், காலை 11:00 மணிக்கு வடை, பஜ்ஜி, பக்கோடா, டீ, காபி ஆகியவை கிடைக்கிறது. மதியம் எலுமிச்சை, மல்லி, தக்காளி, புளி, பிரியாணி என்று பொட்டலச்சாப்பாடு கிடைக்கிறது.
மாலையில் மசால்கடலை, வேர்க்கடலை, காரப்பொரி, பேல்பூரி, பானிபூரி, கட்லெட் ஆகியவை கிடைக்கிறது. இது தவிர, பழைய கலெக்டர் அலுவலக வளாகத்தில் கடைவிரிக்கும் வியாபாரிகள் வேஷ்டி, சேலை, உள்ளாடைகள், சோப் டப்பா, டிபன்பாக்ஸ் , பென்சில், பேனா என்று ஏராளமான பொருட்களை விற்பனை செய்கின்றனர்.
உள்ளாடைகளை தேர்வு செய்பவர்கள், அதன் எண் மற்றும் பிராண்டை சொல்லிவிட்டால் போதும்; நேரடியாக இருக்கைக்கே கொண்டு வந்து கொடுக்கின்றனர்.
'நாங்க வேலை பார்க்கும் இடத்திற்கே, கொண்டு வந்து குடுக்கிறாங்களக்கும்' என்று இதை பெருமையாக சொல்லிக்கொள்கின்றனர்.
இனியாவது கண்டு கொள்வாரா, கலெக்டரின் நேர்முக உதவியாளர்?