/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தனியார் கட்டடத்தில் தொங்கும் கம்பி; விபத்து ஏற்படும் முன் அகற்றப்படுமா? தனியார் கட்டடத்தில் தொங்கும் கம்பி; விபத்து ஏற்படும் முன் அகற்றப்படுமா?
தனியார் கட்டடத்தில் தொங்கும் கம்பி; விபத்து ஏற்படும் முன் அகற்றப்படுமா?
தனியார் கட்டடத்தில் தொங்கும் கம்பி; விபத்து ஏற்படும் முன் அகற்றப்படுமா?
தனியார் கட்டடத்தில் தொங்கும் கம்பி; விபத்து ஏற்படும் முன் அகற்றப்படுமா?
ADDED : ஜூலை 25, 2024 12:19 AM

பொள்ளாச்சி : பொள்ளாச்சி, கடைவீதியில் தனியாருக்கு சொந்தமான வணிக வளாக கட்டடம் ஒன்றில் ஆபத்தான நிலையில் தொங்கும் இரும்பு கம்பியை அகற்ற, நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொள்ளாச்சி நகரில், கிழக்கு போலீஸ் ஸ்டேஷன் சுற்றுப்பகுதியில், பெருமளவு வணிகக் கடைகள் அமைந்துள்ளன. குறிப்பாக, துணிக்கடைகள், நகைக் கடைகள், மளிகை, மருந்தகங்கள் என, அனைத்து கடைகளும் இருப்பதால், தினமும், பல்லாயிரக்கணக்கான மக்கள், இப்பகுதிக்கு வந்து செல்கின்றனர். மேலும், வாகன போக்குவரத்தும் நிறைந்தும் காணப்படுகிறது.
இந்நிலையில், கிழக்கு போலீஸ் ஸ்டேஷன் அருகில் உள்ள, தனியார் வணிகவளாக கட்டடம் ஒன்றில், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், இரும்பு கம்பி ஒன்று, ஆபத்தான நிலையில் தொங்கிக் கொண்டுள்ளது.
எந்த நேரத்தில் கீழே விழுந்தாலும், பெரும் பாதிப்பு ஏற்படும் என்பது தெரிந்தும், இரும்பு கம்பி அகற்றப்படாமல் உள்ளது. அருகே உள்ள கடைக்காரர்கள், சம்பந்தப்பட்ட வணிக வளாக கட்டட நிறுவனத்தாருக்கு தகவல் தெரிவித்தும், ஆபத்தான இரும்பு கம்பியை அகற்ற முன்வருவதில்லை என, புகாரும் எழுந்துள்ளது.
கடைக்காரர்கள் கூறியதாவது:
இப்பகுதியில் உள்ள சில கட்டடங்கள், முறையாக பராமரிக்கப்படாததால், சுவரில் விரிசல், ஈரப்பதம், கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிந்தவாறு, விபத்துக்கு வழிவகுக்கும் வகையில் காணப்படுகின்றன.
போலீஸ் ஸ்டேஷன் அருகில், தனியாருக்கு சொந்தமான கட்டடத்தில் கீழே விழும் நிலையில் இரும்பு கம்பி தொங்குவது தெரிந்தும் அகற்றப்படாமல் உள்ளது. தற்போது, பலத்த காற்றுடன் மழை பெய்வதால், ஏதேனும் ஆபத்து ஏற்படும் முன், தொங்கும் இரும்பு கம்பியை அகற்ற வேண்டும். இதற்கு, நகராட்சி நிர்வாகத்தினர், அப்பகுதியில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.