/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ உங்கள் ஏரியாவை பசுமையாக மாற்ற மரக்கன்றுகள் இலவசம் உங்கள் ஏரியாவை பசுமையாக மாற்ற மரக்கன்றுகள் இலவசம்
உங்கள் ஏரியாவை பசுமையாக மாற்ற மரக்கன்றுகள் இலவசம்
உங்கள் ஏரியாவை பசுமையாக மாற்ற மரக்கன்றுகள் இலவசம்
உங்கள் ஏரியாவை பசுமையாக மாற்ற மரக்கன்றுகள் இலவசம்
ADDED : ஜூன் 29, 2024 12:29 AM
கோவை:இயற்கை அறக்கட்டளை, வனத்துறையுடன் இணைந்து பள்ளி, கல்லூரி, அலுவலக வளாகங்கள், விவசாயிகளுக்கு இலவசமாக, மரக்கன்றுகள் வினியோகித்து வருகிறது.
இதுதொடர்பாக, இயற்கை அறக்கட்டளை நிறுவனர் வினோத் கூறியதாவது:
இயற்கை அறக்கட்டளை சார்பில் இலவசமாக மரக்கன்றுகளை வழங்கியும், நட்டும் தருகிறோம்.
பள்ளி, கல்லூரி, அலுவலக வளாகங்களில் நடுவதற்கு வேம்பு, புங்கன், பூவரசு, நாவல், கொய்யா, சீதா, வாகை, இலுப்பை மரக்கன்றுகள் வழங்குகிறோம். மரக்கன்றுகள் பாதுகாப்பாக வளர்வதை உறுதி செய்ய வேண்டும். தண்ணீர் வசதி இருக்க வேண்டும்.
வனத்துறையின் வனவியல் விரிவாக்க மையத்தின் வாயிலாக தேக்கு, மலைவேம்பு, நாவல், மகாகனி, புளி, சந்தனம், வில்வம், நீர் மருது, வாகை, வேங்கை, நெல்லி, ஈட்டி, பலா, புங்கன், வேம்பு ஆகிய மரக்கன்றுகள் வழங்கப்படுகின்றன.
பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நடுவதற்கும், தன்னார்வ அமைப்புகளுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்படும். தேவைப்படுவோர் 99420 03322, 86673 32183, 96266 22664 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.