/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரியிடம் ரூ.41 லட்சம் மோசடி ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரியிடம் ரூ.41 லட்சம் மோசடி
ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரியிடம் ரூ.41 லட்சம் மோசடி
ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரியிடம் ரூ.41 லட்சம் மோசடி
ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரியிடம் ரூ.41 லட்சம் மோசடி
ADDED : ஜூலை 03, 2024 01:04 AM
கோவை:ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரியிடம், ரூ.41.34 லட்சம் ஆன்லைன் மோசடி குறித்து, சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.
கோவை, கவுண்டம்பாளையம் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் வர்கீஸ்,64. விமானப்படை அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவருக்கு, கடந்த மே 24ம் தேதி வந்த, 'வாட்ஸ் ஆப்' குறுந்தகவலில், 'ஆன்லைன் வாயிலாக முதலீடு செய்தால் அதிகம் சம்பாதிக்கலாம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல தொழிலதிபரின் வர்த்தகம் தொடர்பாக, பேசிய வீடியோவும் அதில் இடம்பெற்றுள்ளது. இதை நம்பி, 'வாட்ஸ் ஆப்'பில் வந்த, மொபைல் போன் எண்ணை, தொடர்பு கொண்டுள்ளார்.
அதில் பேசியவர்கள் கூறிய, வங்கி கணக்கு எண்ணுக்கு பல தவணைகளாக ரூ.41 லட்சத்து, 34 ஆயிரத்து, 112ஐ வர்கீஸ் அனுப்பினார்.
ஆனால், அதற்கான லாபத்தொகை வராததால், பலமுறை முயற்சித்தும் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. ஏமாற்றப்பட்டதை அறிந்த வர்கீஸ், மோசடி குறித்து மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.