/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஜமாபந்தியில் மனு தரலாம் வருவாய் துறை அழைப்பு ஜமாபந்தியில் மனு தரலாம் வருவாய் துறை அழைப்பு
ஜமாபந்தியில் மனு தரலாம் வருவாய் துறை அழைப்பு
ஜமாபந்தியில் மனு தரலாம் வருவாய் துறை அழைப்பு
ஜமாபந்தியில் மனு தரலாம் வருவாய் துறை அழைப்பு
ADDED : ஜூன் 16, 2024 11:17 PM
அன்னுார்;'ஜமாபந்தியில் மனு தரலாம்,' என, அன்னுார் வருவாய் துறை அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
அன்னுார் தாலுகா அலுவலகத்தில், ஜமாபந்தி வரும் 20, 21 மற்றும் 25ம் தேதி தனி துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தலைமையில் நடைபெற உள்ளது.
இதில் பட்டா மாறுதல், பட்டா உட்பிரிவு செய்தல், நில அளவை செய்தல், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனை பட்டா, ரேஷன் கார்டு, மகளீர் உரிமை திட்ட தொகை, தொகுப்பு வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மக்கள் மனு கொடுக்கலாம்.
வரும் 20ம் தேதி அன்னுார் பேரூராட்சி, வடவள்ளி, காரே கவுண்டம்பாளையம், கரியாம் பாளையம், பிள்ளையப்பம் பாளையம், மசக்கவுண்டன் செட்டிபாளையம், காட்டம்பட்டி, குப்பே பாளையம், குன்னத்தூர், பச்சாபாளையம், நாரணாபுரம் ஆகிய வருவாய் கிராமங்களை சேர்ந்தவர்கள் மனு கொடுக்கலாம்.
வரும் 21ம் தேதி பொகலூர், குப்பனுார், அக்கரை செங்கப்பள்ளி, கணுவக்கரை, ஆம்போதி, வடக்கலூர், அ மேட்டுப்பாளையம், பசூர், அல்லப்பாளையம், கஞ்சப்பள்ளி, ஒட்டர்பாளையம் ஆகிய வருவாய் கிராமங்களை சேர்ந்தவர்கள் மனு கொடுக்கலாம்.
வரும் 25ம் தேதி வெள்ளமடை, அக்ரஹார சாமக்குளம், இடிகரை, கீரணத்தம், கொண்டையம் பாளையம், எஸ்.எஸ்.குளம் பேரூராட்சி, கள்ளிப்பாளையம், வெள்ளானைப்பட்டி ஆகிய வருவாய் கிராமங்களை சேர்ந்தவர்கள் மனு கொடுக்கலாம்.
இவ்வாறு வருவாய் துறையினர் தெரிவித்தனர்.