/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மாநகராட்சி துணை கமிஷனர் காரில் பம்பர், முகப்பு விளக்கு, ஹாரன் அகற்றம் மாநகராட்சி துணை கமிஷனர் காரில் பம்பர், முகப்பு விளக்கு, ஹாரன் அகற்றம்
மாநகராட்சி துணை கமிஷனர் காரில் பம்பர், முகப்பு விளக்கு, ஹாரன் அகற்றம்
மாநகராட்சி துணை கமிஷனர் காரில் பம்பர், முகப்பு விளக்கு, ஹாரன் அகற்றம்
மாநகராட்சி துணை கமிஷனர் காரில் பம்பர், முகப்பு விளக்கு, ஹாரன் அகற்றம்
ADDED : ஜூன் 20, 2024 05:47 AM

கோவை : நமது நாளிதழில் வெளியிட்ட செய்தியை தொடர்ந்து, கோவை மாநகராட்சி துணை கமிஷனரின் காரில் இருந்து பம்பர் மற்றும் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஹாரன்கள், முகப்பு விளக்குகள் அகற்றப்பட்டன.
தமிழகத்தில் இயக்கப்படும் வாகனங்களில், பம்பர் பொருத்தியிருக்கக் கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, அரசு துறை வாகனங்களில் இருந்த பம்பர்கள் அகற்றப்பட்டன. ஆனால், மாநகராட்சி துணை கமிஷனருக்காக புதிதாக வாங்கப்பட்ட 'ஸ்கார்பியா' காரில், பதிவெண் தெரியாத அளவுக்கு, பம்பர் பொருத்தப்பட்டு இருந்தது.
மேலும், அதிக ஒளி தரக்கூடிய இரு விளக்குகள் மற்றும் சாலையில் செல்வோர் அச்சத்துக்கு உள்ளாகும் வகையில், அதிக ஒலி எழுப்பக் கூடிய நான்கு ஹாரன்கள் கூடுதலாக பொருத்தப்பட்டு இருந்தன.
இது தொடர்பாக, நேற்றைய நமது நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, வட்டார போக்குவரத்து துறையினர், மாநகராட்சி அலுவலகத்தை தொடர்பு கொண்டு எச்சரிக்கை விடுத்தனர்.
சாலை விதிகளை மீறி, அவ்வாகனத்தை இயக்கினால், போக்குவரத்து துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை தொடர்ந்து, துணை கமிஷனரின் காரில் பொருத்தப்பட்டு இருந்த பம்பர் மற்றும் கூடுதல் முகப்பு விளக்குகள், அதிக ஒலி எழுப்பக் கூடிய ஹாரன்கள் ஆகியவற்றை, மாநகராட்சி அலுவலர்கள் நேற்று அகற்றினர்.
பொதுமக்கள் செலுத்திய வரிப்பணத்தை செலவிட்டு, இந்த கார், 2023ம் ஆண்டு செப்., மாதம் மாநகராட்சி கமிஷனர் பெயரில் புதிதாக வாங்கப்பட்டிருக்கிறது. இது அரசு வாகனம் இல்லை என்பதால், டி.என்., 66 ஏபி 7312 என்ற பதிவெண் வழங்கப்பட்டு இருக்கிறது.
அரசு வாகனமாக இருந்தால், பதிவெண்ணில், 'ஜி' என்ற எழுத்து இடம் பெறும். இதன் காரணமாக, 'கோவை மாநகராட்சி' என்றே, ஸ்டிக்கர் ஒட்டுவது வழக்கம்.
ஆனால், இந்த காரில் தமிழ்நாடு அரசு என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கிறது. இந்த தவறும் மாநகராட்சி அலுவலர்களுக்கு, சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.