/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கார்மல் கார்டன் பள்ளியில் ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே! கார்மல் கார்டன் பள்ளியில் ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே!
கார்மல் கார்டன் பள்ளியில் ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே!
கார்மல் கார்டன் பள்ளியில் ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே!
கார்மல் கார்டன் பள்ளியில் ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே!
ADDED : ஜூலை 28, 2024 12:55 AM

கோவை;கோவை கார்மல் கார்டன் பள்ளியில், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, பள்ளி அரங்கில் நேற்று நடந்தது.
பள்ளியில், 1993ம் ஆண்டு பயின்ற 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் 30 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்காக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, லண்டன் போன்ற வெளிநாடுகளில் வசித்து வருபவர்கள் மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களில் வசிப்பவர்கள் என, பலர் வந்திருந்தனர்.
அனைவரும் ஒருவருக்கு ஒருவர் தங்களின் பள்ளி பருவத்து நினைவுகளை மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டனர். 30 ஆண்டுகளுக்கு முன் பணியாற்றிய ஆசிரியர்கள் பலர், நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். அவர்களை வகுப்பு நடத்த சொல்லி, அனைவரும் அமர்ந்து பாடம் கேட்டனர். பிறகு ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கி, ஆசி பெற்றனர்.
இந்த நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கார்மல் கார்டன் பள்ளி முன்னாள் மாணவர் சங்க தலைவர் செல்வம் நந்தக்குமார் பேசியதாவது:
கார்மல் கார்டன் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு, தனி சிறப்பு உண்டு. கோவையில் உள்ள முக்கிய தொழில் அமைப்புகளின் தலைவர்களாகவும், நிர்வாகிகளாகவும், தொழில் அதிபர்களாகவும் இந்த பள்ளியில் பயின்றவர்கள் உள்ளனர்.
குறிப்பாக சைமா, சீமா, இண்டியன் பம்ப் அசோசியேஷன் உள்ளிட்ட முக்கிய அமைப்புகளின் தலைமை பொறுப்புகளில் இருந்துள்ளனர். பல சிறந்த தொழில்துறை வல்லுநர்களை இந்த பள்ளி உருவாக்கி இருக்கிறது. விரைவில் இந்த பள்ளியின், 60வது ஆண்டு விழா நடக்க உள்ளது. அந்த விழாவில் அனைத்து முன்னாள் மாணவர்களும் பங்கேற்று, பள்ளிக்கு வேண்டிய உதவிகளை செய்வோம்.
இவ்வாறு, அவர் பேசினார்.