ADDED : மார் 13, 2025 11:35 PM

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, பட்டணத்தில் உள்ள ராமர் கோவிலில், 11ம் ஆண்டு விழா நடந்தது.
கிணத்துக்கடவு, நல்லட்டிபாளையம் ஊராட்சி பட்டணம் கிராமத்தில் உள்ள ராமர் கோவிலில் 11ம் ஆண்டு விழா நடந்தது. இதில், பட்டணம் சிவன் கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து, சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து பல்வேறு அபிஷேகம், அலங்கார மற்றும் தீபாராதனை நிகழ்ச்சிகள் நடந்தது.
இதில், பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.