/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ரோட்டில் தேங்கும் மழைநீர்; பொதுமக்கள் அதிருப்தி ரோட்டில் தேங்கும் மழைநீர்; பொதுமக்கள் அதிருப்தி
ரோட்டில் தேங்கும் மழைநீர்; பொதுமக்கள் அதிருப்தி
ரோட்டில் தேங்கும் மழைநீர்; பொதுமக்கள் அதிருப்தி
ரோட்டில் தேங்கும் மழைநீர்; பொதுமக்கள் அதிருப்தி
ADDED : ஜூலை 24, 2024 08:31 PM

வால்பாறை : வால்பாறையில் பருவமழை தொடர்ந்து பெய்கிறது. இதனால், ரோட்டில் அங்கங்கே மழை நீர் தேங்கி நிற்கிறது. சில இடங்களில் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. கழிவுநீருடன் மழை நீர் கலந்து ரோட்டில் வழிந்தோடுகிறது.
இதனால், அந்த வழித்தடத்தில் வாகன ஓட்டுநர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். அந்த வழியாக நடந்து செல்லும் பொது மக்கள் மீதும் கழிவு நீர் தெரிக்கிறது. இதனால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வால்பாறை நகர் கருப்பாலம், காமராஜர் நகர், சோலையாறு அணை செல்லும் ரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில், ரோட்டில் மழை நீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டுநர்களும், பொது மக்களும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சோலையாறு அணை ரோட்டில் தேங்கும் மழை நீர் வெளியேற நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.