/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மலைப்பகுதியில் தபால் சேவை; குறும்படம் வாயிலாக பாராட்டு மலைப்பகுதியில் தபால் சேவை; குறும்படம் வாயிலாக பாராட்டு
மலைப்பகுதியில் தபால் சேவை; குறும்படம் வாயிலாக பாராட்டு
மலைப்பகுதியில் தபால் சேவை; குறும்படம் வாயிலாக பாராட்டு
மலைப்பகுதியில் தபால் சேவை; குறும்படம் வாயிலாக பாராட்டு
ADDED : ஜூலை 24, 2024 08:32 PM

வால்பாறை : வால்பாறை அடுத்துள்ளது சின்னக்கல்லார். தமிழகத்தின் சிரபுஞ்சி என்றழைக்கப்படும் இங்கு வனவிலங்குகள் அதிக அளவில் நடமாடுகிறது. இங்குள்ள கிராமத்து மக்களின் நலன் கருதி அஞ்சல் துறை சார்பில், கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக, கிளை அஞ்சலகம் செயல்படுகிறது.
ஆண்டில் தொடர்ச்சியாக ஆறு மாதங்கள் மழை பெய்யும் என்பதால், இந்த கிராமத்தில் மின்சாரம் மற்றும் இணையதள சேவை முற்றிலுமாக பாதிக்கப்படும்.
இந்நிலையில், இந்த அஞ்சலகத்தில் தபால்காரராக பணிபுரியும் கிருத்திகா, நாள்தோறும் வரும் தபால்களை கடும் சிரமத்திற்கு இடையே பொதுமக்களுக்கு வழங்க, அவர்கள் பணிபுரியும் இடம் மற்றும் வீடுகளுக்கு கொட்டும் மழையில் ரெயின் கோட், குடை சகிதமாக சென்று தபால்களையும், முதியோர் உதவி தொகையும் வழங்கி வருகிறார். இவரது பணியை தபால்துறை குறும்படமாக எடுத்து, இணையதளத்தில் பதிவிட்டுள்ளது.
வால்பாறை போஸ்ட் மாஸ்டர் கீதாவிடம் கேட்ட போது, 'வால்பாறை மலைப்பகுதியில், வனவிலங்கு நடமாட்டம் அதிகமுள்ளது. இங்கு, கொட்டும் மழையிலும் தபால் சேவை சிறப்பாக நடக்கிறது.
குறிப்பாக, சின்னக்கல்லார் எஸ்டேட் பகுதியில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு மழையிலும் ஊழியர்கள் சிறப்பாக பணியாற்றுகின்றனர்,' என்றார்.