Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அனைத்து துறை சார்பில் மக்கள் தொடர்பு முகாம்! கிணத்துக்கடவு ஒன்றியத்தில் 9 இடங்களில் நடக்குது

அனைத்து துறை சார்பில் மக்கள் தொடர்பு முகாம்! கிணத்துக்கடவு ஒன்றியத்தில் 9 இடங்களில் நடக்குது

அனைத்து துறை சார்பில் மக்கள் தொடர்பு முகாம்! கிணத்துக்கடவு ஒன்றியத்தில் 9 இடங்களில் நடக்குது

அனைத்து துறை சார்பில் மக்கள் தொடர்பு முகாம்! கிணத்துக்கடவு ஒன்றியத்தில் 9 இடங்களில் நடக்குது

ADDED : ஜூலை 19, 2024 01:43 AM


Google News
கிணத்துக்கடவு,:கிணத்துக்கடவு ஒன்றியத்தில், ஒன்பது இடங்களில் மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்படுகிறது.

தமிழக அரசு சார்பில், கோவை மாவட்டத்தில் மக்கள் குறைகளை போக்க, ஜூலை முதல் செப்., மாதம் வரை மக்கள் தொடர்பு முகாம் நடக்கிறது. கிணத்துக்கடவு ஒன்றியத்தில், 34 ஊராட்சிகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.

இப்பகுதி மக்களின் குறைகள் தெரிவிக்க, அந்தந்த துறை சார்ந்த அலுவலகத்திற்கு சென்று மனு அளித்து வந்தனர். தற்போது மக்கள் குறைகளை தீர்க்கும் வகையில், ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, எரிசக்தி துறை, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை உள்ளிட்ட 15 துறைகள் ஒரே இடத்தில் மக்கள் குறைகளை நிவர்த்தி செய்ய, நான்கு ஊராட்சிக்கு ஒரு முகாம் என, ஒன்பது இடங்களில், மக்கள் தொடர்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டது.

இதை தொடர்ந்து கடந்த 16ம் தேதி, வடபுதூர், குதிரையாலம்பாளையம், பொட்டையாண்டிபுறம்பு, சொக்கனூர் ஆகிய நான்கு ஊராட்சிகளுக்கு முகாம் நடந்தது. இதே போல் மீதம் உள்ள ஊராட்சிகளுக்கு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

வரும், 23ம் தேதி, கப்பளாங்கரை சிவசக்தி திருமண மண்டபத்தில், கப்பளாங்கரை, காட்டம்பட்டி, சிறுகளந்தை ஊராட்சிகளுக்கு முகாம் நடக்கிறது. 30ம் தேதி, நெ.10.முத்தூர் ஆர்.கே.என்., மண்டபத்தில், நெ.10.முத்தூர், தேவராயபுரம், கோவிந்தாபுரம் ஊராட்சிகளுக்கு முகாம் நடக்கிறது.

ஆகஸ்ட் 6ம் தேதி, சொலவம்பாளையம் எல்.ஜே.ஜே., மண்டபத்தில், சொலவம்பாளையம், அரசம்பாளையம், கொண்டம்பட்டி ஊராட்சிகளுக்கு முகாம் நடக்கிறது. ஆக., 13ம் தேதி, பெரியகளந்தை மயில்சாமி திருமண மண்டபத்தில், பெரியகளந்தை, குருநல்லிபாளையம், ஆண்டிபாளையம் ஊராட்சிகளுக்கு முகாம் நடக்கிறது.

ஆக., 20ம் தேதி, கோவில்பாளையம் சுமங்கலி மண்டபத்தில், கோவில்பாளையம், முள்ளுப்பாடி, மேட்டுப்பாளையம், சூலக்கல், குளத்துப்பாளையம் ஊராட்சிகளுக்கு முகாம் நடக்கிறது.

ஆக., 27ம் தேதி, செட்டியக்காபாளையம் பெருமாள் கோவில் மண்டபத்தில், கோதவாடி, கோடங்கிபாளையம், செட்டியக்காபாளையம், நல்லட்டிபாளையம் ஊராட்சிகளுக்கு முகாம் நடக்கிறது.

செப்டம்பர் 3ம் தேதி, வடசித்தூர் காமாட்சி மண்டபத்தில், வடசித்தூர், பனப்பட்டி, மெட்டுவாவி, மன்றாம்பாளையம் ஊராட்சிகளுக்கு முகாம் நடக்கிறது. செப்., 13ம் தேதி, தேவனாம்பாளையம் சமுதாய கூடத்தில், தேவனாம்பாளையம், கக்கடவு, சோழனூர், காணியாலம்பாளையம், வடசித்தூர் ஊராட்சிகளுக்கு முகாம் நடக்கிறது.

இத்தகவலை, கிணத்துக்கடவு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சதீஸ்குமார் மற்றும் விஜய்குமார் ஆகியோர் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us