/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சமூக சேவகரிடம் ரூ.90 லட்சம் மோசடி சமூக சேவகரிடம் ரூ.90 லட்சம் மோசடி
சமூக சேவகரிடம் ரூ.90 லட்சம் மோசடி
சமூக சேவகரிடம் ரூ.90 லட்சம் மோசடி
சமூக சேவகரிடம் ரூ.90 லட்சம் மோசடி
ADDED : ஜூலை 19, 2024 02:18 AM
கோவை:கோவை, கணபதி கே.பி.ஆர்., நகரை சேர்ந்தவர் பட்டாபிராமன், 65. ஆதரவற்றோர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு சமூக சேவை செய்கிறார்.
ஆன்லைன் வர்த்தகம் செய்து, அதில் கிடைக்கும் வருவாயை சமூக சேவை பணிக்கு பயன்படுத்த திட்டமிட்டிருந்தார். அதற்காக, ஆன்லைனில் முதலீடு செய்வது குறித்து, இணையதளத்தில் தகவல் தேடி கொண்டிருந்தார்.
அப்போது, இணையதளத்தில் மர்ம நபரிடம் இருந்து வந்த தகவலின்படி, ஏப்., 13 முதல் ஜூன் 5ம் தேதி வரை, அந்த நபர் குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு, 14 தவணைகளில், 90 லட்சம் ரூபாய் செலுத்தினார்.
ஆனால், லாப தொகை வராத நிலையில், அந்த நபரிடம் ஆன்லைனில் கேள்வி எழுப்பினார். கூடுதலாக முதலீடு செய்யுமாறு அந்த நபர் வலியுறுத்தினார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பட்டாபிராமன், மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.