/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ போத்தனுார் ரயில்வே ஸ்டேஷன் பெயர் மாற்றும் முடிவுக்கு எதிர்ப்பு போத்தனுார் ரயில்வே ஸ்டேஷன் பெயர் மாற்றும் முடிவுக்கு எதிர்ப்பு
போத்தனுார் ரயில்வே ஸ்டேஷன் பெயர் மாற்றும் முடிவுக்கு எதிர்ப்பு
போத்தனுார் ரயில்வே ஸ்டேஷன் பெயர் மாற்றும் முடிவுக்கு எதிர்ப்பு
போத்தனுார் ரயில்வே ஸ்டேஷன் பெயர் மாற்றும் முடிவுக்கு எதிர்ப்பு
ADDED : ஜூலை 25, 2024 11:30 PM
கோவை : போத்தனுார் ரயில்வே ஸ்டேஷன் பெயர் மாற்றும் முடிவுக்கு மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, அதன் தலைவர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை:
கோவை, போத்தனூர் ரயில்வே ஸ்டேஷனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதை வரவேற்கிறோம். மேட்டுப்பாளையம் - கோயம்புத்தூர் ரயில், போத்தனூர் வரை நீட்டிக்கப்பட்டு இருப்பது கோவை மாவட்ட மக்கள் அனைவருக்கும் மிகுந்த பயன்அளிக்கும். போத்தனூரில், மேலும் பல ரயில்கள் நிறுத்தப்படுவது, கோவை ரயில்வே ஸ்டேஷன் நெரிசலை குறைக்கவும், கோவை தெற்குபகுதி மக்களுக்கான போக்குவரத்து வசதியை மேம்படுத்தவும் உதவும்.
போத்தனூர் ரயில்வே ஸ்டேஷன், இந்திய ரயில்வே வரலாற்றில் பதிந்துள்ள புராதன பெயராகும். போத்தனூர் ரயில்வே ஸ்டேஷனை, கோவை தெற்கு என்று மாற்றி அமைக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பெயர் மாற்றுவதால் எந்த பிரயோஜனமும் இல்லை. பெயர் மாற்றும் நடவடிக்கையினை ரயில்வே நிர்வாகம் கைவிட வேண்டும். இவ்வாறு, ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.