/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பண்ணை , சுற்றுச்சூழல் சுற்றுலா திட்டம் கோவை , பொள்ளாச்சியில் உருவாக்க பரிந்துரை பண்ணை , சுற்றுச்சூழல் சுற்றுலா திட்டம் கோவை , பொள்ளாச்சியில் உருவாக்க பரிந்துரை
பண்ணை , சுற்றுச்சூழல் சுற்றுலா திட்டம் கோவை , பொள்ளாச்சியில் உருவாக்க பரிந்துரை
பண்ணை , சுற்றுச்சூழல் சுற்றுலா திட்டம் கோவை , பொள்ளாச்சியில் உருவாக்க பரிந்துரை
பண்ணை , சுற்றுச்சூழல் சுற்றுலா திட்டம் கோவை , பொள்ளாச்சியில் உருவாக்க பரிந்துரை
ADDED : ஜூன் 25, 2024 02:21 AM
கோவை:கோவை மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் , பண்ணை மற்றும் சுற்றுச்சூழல் சுற்றுலா திட்டம் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் உருவாக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
கோவையை பொறுத்தவரையில், டாப்சிலிப், கோனியம்மன் கோவில், பட்டீஸ்வரர் கோவில், மருதமலை உள்ளிட்ட 23 முக்கிய சுற்றுலாதலங்கள் பட்டியலில் உள்ளன.
வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து வரும் பலருக்கு, பிரபலமாகாத பல்வேறு சுற்றுலா தளங்கள் இங்கு இருப்பது தெரிவதில்லை.
இதனால், சுற்றுலா வருபவர்கள் கோவையில் தங்கி பல்வேறு இடங்களுக்கு சென்றும் வரும் வகையில், இரண்டாம் கட்ட பிரபலமாகாத தளங்களை மேம்படுத்தவும், பண்ணை- சுற்றுச்சூழல் சுற்றுலா, மருத்துவ சுற்றுலா, ஆன்மிக சுற்றுலாவை மேம்படுத்தவும், மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில், பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கோவையில், பண்ணை - சுற்றுச்சூழல் சுற்றுலா திட்டம் பொள்ளாச்சியில் உருவாக்க பரிந்துரை செய்துள்ளோம். இதற்கு, வேட்டைக்காரன் புதுார் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை ஆய்வு செய்துள்ளோம்.
அழகிய பண்ணை சூழலில், பல்வேறு அம்சங்கள் ஏற்படுத்தப்படும். பிரபலமாகாத, ஆனால், பல்வேறு பழமையான முக்கியத்துவம் வாய்ந்த கோவில்கள், பல இங்கு உள்ளன. மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவில், தடாகம் அனுபாவி கோவில், காரமடை குழந்தை வேலாயுத சாமி கோவில், பொள்ளாச்சி சூலக்கல் மாரியம்மன் கோவில் போன்ற பல்வேறு கோவில்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மருத்துவ சுற்றுலாவிற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படவுள்ளது' என்றார்.