ADDED : ஜூலை 15, 2024 02:24 AM

சூலுார்:பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு, திருமூலர் அறக்கட்டளை சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.
திருமூலர் வாழ்வியல் அறக்கட்டளை சார்பில், 10 மற்றும், 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியருக்கு பாராட்டு விழா சூலுாரில் நடந்தது. பேராசிரியர் ஈஸ்வரன் தலைமை வகித்தார்.
தனியார் நிறுவன நிர்வாக இயக்குனர் ராஜசேகரன் மாணவர்களை பாராட்டி பரிசுகள் வழங்கி பேசுகையில், ''உழைப்பும், விடா முயற்சியும் வாழ்க்கையின் வெற்றி படிகள்.
வாழ்வியல் நெறி சார்ந்த கருத்துக்களை படித்து பின்பற்ற வேண்டும். அப்போதுதான் ஊழலற்ற நேர்மையான சமுதாயம் உருவாகும்,'' என்றார்.
50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பரிசு பெற்றனர். அறக்கட்டளை சார்பில் வல்லுனர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அறக்கட்டளை தலைவர் பெருமாள்சாமி, பொருளாளர் நடராஜன், பாக்கியலட்சுமி, மகேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.