ADDED : ஜூலை 15, 2024 02:23 AM
அன்னுார்;அருட்தந்தை, வேதாத்திரி மகரிஷி வடிவமைத்த, மனவளக்கலை யோகாவை, அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்க்க, உலக சமுதாய சேவா சங்கம் சார்பில், பிரசார வாகனம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வாகனம் இன்று (15ம் தேதி) மதியம் 2:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை சொக்கம்பாளையத்திற்கு வருகை தருகிறது. இதில், எளிய முறை உடற்பயிற்சி, தியானம், யோகா, காயகல்ப பயிற்சி குறித்து தெரிவிக்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் பிரசாரத்தில் பங்கேற்று பயன் பெறலாம், என மனவளக்கலை மன்ற நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.