/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பிரதம மந்திரி புதுப்பிக்கப்பட்ட பயிர் காப்பீட்டு திட்டம்பிரதம மந்திரி புதுப்பிக்கப்பட்ட பயிர் காப்பீட்டு திட்டம்
பிரதம மந்திரி புதுப்பிக்கப்பட்ட பயிர் காப்பீட்டு திட்டம்
பிரதம மந்திரி புதுப்பிக்கப்பட்ட பயிர் காப்பீட்டு திட்டம்
பிரதம மந்திரி புதுப்பிக்கப்பட்ட பயிர் காப்பீட்டு திட்டம்
ADDED : ஜூலை 23, 2024 12:12 AM
பெ.நா.பாளையம்;கோவை மாவட்டத்தில் காரிப் பருவம் தொடங்கியுள்ள நிலையில், விவசாயிகள் அனைவரும் எதிர்பாராமல் ஏற்படும் இயற்கை இடர்பாடுகளில் உண்டாகும் மகசூல் இழப்பில் இருந்து, தங்களை பாதுகாத்துக் கொள்ள புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின்படி, அறிவிக்கை செய்யப்பட்ட கிராமங்களில், அறிக்கை செய்யப்பட்ட பயிர்களில், பயிர் காப்பீடு செய்து பயன் பெறலாம்.
பயிர் காப்பீடு செய்ய கடன் பெறும் மற்றும் கடன் பெறா விவசாயிகள் ஆதார் எண் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். நடப்பு ஆண்டில் புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி காப்பீடு திட்டத்தை அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி இந்தியா லிமிடெட் நிறுவனம் செயல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
காரிப் பருவத்தில் நெல், மக்காசோளம், சோளம், உளுந்து, பச்சைபயறு, கொள்ளு ஆகியவற்றை பயிர்காப்பீடு செய்யலாம்.தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், அந்தந்த வட்டாரங்களில் செயல்படும்பொது சேவை மையங்களில் செய்யலாம்.
இத்தகவலை, வேளாண்துறையினர் தெரிவித்தனர்.