/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்
ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்
ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்
ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 14, 2024 12:14 AM

கோவை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டத் தலைவர் ரங்கநாதமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் தங்கபாசு கோரிக்கைகள் குறித்து விளக்கினார்.
ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாட்டில் உள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு அரசு அமல்படுத்தி வரும் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்படி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை வழங்கப்பட வேண்டும். இத்திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பை மேற்கொள்ள தமிழ்நாடு அரசிடம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள நிறுவனம் தமிழக அரசாணையை மதிக்காமல், சிகிச்சை பெறும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு சிகிச்சைக்கான கட்டணத்தில் 20 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை மட்டுமே அனுமதிக்கின்றனர். இதன் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசாணைப்படி கட்டணமில்லா சிகிச்சை வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். மாதந்தோறும் வருமான வரிப் பிடித்தம் செய்வதை கைவிட்டு, பழைய நடைமுறையிலேயே வருமான வரி செலுத்திட அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.