/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பொன் ஏரில் மாடு பூட்டி பேரூரில் பூஜை! ஆனி நாற்று நடவு உற்சவம் கோலாகலம் பொன் ஏரில் மாடு பூட்டி பேரூரில் பூஜை! ஆனி நாற்று நடவு உற்சவம் கோலாகலம்
பொன் ஏரில் மாடு பூட்டி பேரூரில் பூஜை! ஆனி நாற்று நடவு உற்சவம் கோலாகலம்
பொன் ஏரில் மாடு பூட்டி பேரூரில் பூஜை! ஆனி நாற்று நடவு உற்சவம் கோலாகலம்
பொன் ஏரில் மாடு பூட்டி பேரூரில் பூஜை! ஆனி நாற்று நடவு உற்சவம் கோலாகலம்
ADDED : ஜூலை 11, 2024 11:46 PM

தொண்டாமுத்துார் : பேரூரில் ஆனி நாற்று நடவு உற்சவ திருவிழா கோலாகலமாக நடந்தது.
பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி நாற்று நடவு திருவிழா, விமரிசையாக கொண்டாடப்படும். இந்தாண்டு, நாற்று நடவு உற்சவம் கடந்த, 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
தொடர்ந்து, தேவேந்திர குல வேளாளர் மடத்தில், நெல் விதை விடுதல் நடந்தது. நாள்தோறும் காலை, சுந்தரமூர்த்தி நாயனார் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. உற்சவத்தின் ஒன்பதாம் நாளான நேற்று, ஆனி நாற்று நடவு உற்சவ திருவிழா நடந்தது.
தேவேந்திர குல வேளாளர் மடத்தில் இருந்த நெல் நாற்றுக்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. மாலை, 4:30 மணிக்கு, பேரூர் பட்டீஸ்வரர் கோவில் வளாகத்தில் முன், ஏரில் காளை மாடுகள் பூட்டப்பட்டு, பொன் ஏர் பூஜை நடந்தது.
அதன்பின், மேளதாளத்துடன் மக்கள் ஊர்வலமாக வயலுக்கு சென்று, பொன்ஏர் பூட்டி ஏர் உழுதனர். தொடர்ந்து, மடத்தில் இருந்து நாற்று எடுத்து வரப்பட்டது. மாலை, 5:30 மணிக்கு, கோவில் குருக்கள், வயலில் நாற்று நடவு செய்தபின், பொதுமக்கள் நடவு செய்தனர்.
பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், கும்பாபிஷேக பாலாலயம் செய்யப்பட்டு உள்ளதால், சுவாமி கோவிலுக்கு வெளியே வரக்கூடாது என்பதால், கோவில் உட்பிரகாரத்திலேயே, சுவாமி திருவீதியுலா நடந்தது. ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.