/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ டீச்சர்ஸ் காலனியில் கழிவால் பொது சுகாதாரம் பாதிப்பு டீச்சர்ஸ் காலனியில் கழிவால் பொது சுகாதாரம் பாதிப்பு
டீச்சர்ஸ் காலனியில் கழிவால் பொது சுகாதாரம் பாதிப்பு
டீச்சர்ஸ் காலனியில் கழிவால் பொது சுகாதாரம் பாதிப்பு
டீச்சர்ஸ் காலனியில் கழிவால் பொது சுகாதாரம் பாதிப்பு
ADDED : ஜூன் 06, 2024 11:33 PM
பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகராட்சி டீச்சர்ஸ் காலனியில், கழிவுகள் அப்படியே வெளியில் போட்டு, அப்புறப்படுத்தப்படாமல் இருப்பதால், சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
பொள்ளாச்சி டீச்சர்ஸ் காலனி குடியிருப்புகள், கடைகள் நிறைந்த பகுதியாக உள்ளன. இங்கு, கழிவுகள் தேங்குவதால் சுகாதாரம் பாதிப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.
பொதுமக்கள் கூறியதாவது:
நகராட்சிக்கு உட்பட்ட டீச்சர்ஸ் காலனியில், பாதாள சாக்கடை திட்ட கழிவுநீர் தேங்குவதால் பாதிப்புக்குள்ளாகி வருகிறோம். கழிவுகளை சுத்தம் செய்வோர், அப்படியே எடுத்து போட்டு விட்டு, அப்புறப்படுத்தாமல் பல நாட்கள் விடுவதால் சுகாதாரச்சீர்கேடு ஏற்படுகிறது.
இதனால், மக்களுக்கு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இது குறித்து, இந்த வார்டு கவுன்சிலரிடம் முறையிட்டும் எவ்வித பலனும் இல்லை.
உடுமலை ரோடு சாக்கடை மீது போடப்பட்டுள்ள இரண்டு சிலாப்புகள் மூடப்படாமல் உள்ளதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, இதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.