/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அரசு விடுதிகளில் சேர்க்கை மாணவர்களுக்கு அழைப்பு அரசு விடுதிகளில் சேர்க்கை மாணவர்களுக்கு அழைப்பு
அரசு விடுதிகளில் சேர்க்கை மாணவர்களுக்கு அழைப்பு
அரசு விடுதிகளில் சேர்க்கை மாணவர்களுக்கு அழைப்பு
அரசு விடுதிகளில் சேர்க்கை மாணவர்களுக்கு அழைப்பு
ADDED : ஜூன் 06, 2024 11:32 PM
பொள்ளாச்சி;தமிழக அரசால், கோவை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவர்கள் மற்றும் மாணவியருக்கென, 26 விடுதிகள் நடத்தப்படுகின்றன.
மூன்று வேளை உணவு, தங்கும் வசதி அளிக்கப்படும். 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு 4 செட் சீருடை தைத்து வழங்கப்படும். 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்த சிறப்பு வழிகாட்டிகள், வினா வங்கி நுால்கள் வழங்கப்படும்.
கல்லுாரி விடுதிகளில், முதலாம் ஆண்டு தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு ஜமுக்காளம், பள்ளி விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் பாய் வழங்கப்படும்.
மலைப்பிரதேசங்களில் உள்ள விடுதிகளில், கம்பளி மேலாடை வழங்கப்படும். பெற்றோர் அல்லது பாதுகாவலரது ஆண்டு வருமானம், இரண்டு லட்சம் ரூபாய்க்கு மிகக்கூடாது. இருப்பிடத்தில் இருந்து கல்வி நிலையத்தின் துாரம், 8 கி.மீ.,க்கு மேல் இருக்க வேண்டும்; இந்த விதி மாணவியருக்கு பொருந்தாது.
பள்ளி விடுதியில் சேர, வரும், 14ம் தேதிக்குள்ளும், கல்லுாரி விடுதியில் சேர, 15ம் தேதிக்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளரிடம் கொடுக்கலாம் அல்லது கலெக்டர் அலுவலகத்தில், சம்பந்தப்பட்ட பிரிவில் வழங்கலாம்.
விண்ணப்பத்துடன் ஜாதி மற்றும் பெற்றோரின் ஆண்டு வருமான சான்றிதழ் அளிக்கத் தேவையில்லை என, கோவை கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.